ஆம்புலன்ஸில் காத்திருக்கும் கரோனா தொற்றாளர்களுக்கு தற்காலிகமாக ஆக்சிஜன் கிடைக்க பிரத்தியேக வார்டு: கோவை அரசு மருத்துவமனையில் ஏற்பாடு

கோவை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக வார்டில் ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் கருவி மூலம் கரோனா தொற்றாளர்களுக்கு அளிக்கப் படும் ஆக்சிஜன்.
கோவை அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பிரத்தியேக வார்டில் ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர் கருவி மூலம் கரோனா தொற்றாளர்களுக்கு அளிக்கப் படும் ஆக்சிஜன்.
Updated on
1 min read

ஆக்சிஜன் படுக்கையில் இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக ஆம்புலன்ஸ்களில் தொற்றாளர்கள் காத்திருப்பதைத் தவிர்க்க கோவை அரசு மருத்துவமனையில் 15 படுக்கைகளுடன் பிரத்தியேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

கோவையில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துவிட்டது.

தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படுபவர்களுக்கு ஆக்சிஜன் படுக்கை வசதி தேவைப்படுகிறது. கோவையில் பெரும்பாலான மருத் துவமனைகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் நிரம்பிய நிலையிலேயே இருப்பதால், இடம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொற்றாளர்கள் ஆம்புலன்ஸ்களிலேயே பல மணி நேரம் மருத்துவமனைகளுக்கு வெளியே காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஒருவேளை ஆம்பு லன்ஸில் இருக்கும் ஆக்சிஜன் தீர்ந்துவிட்டால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

இதைத் தவிர்க்கும் வகையில், கோவை அரசு மருத்துவமனையில் கரோனா வார்டுக்கு அருகிலேயே 15 படுக்கைகள் கொண்ட தற்காலிக வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மருத்துவமனை யின் டீன் நிர்மலா கூறும்போது, “ஆக்சிஜன் படுக்கைகள் காலியாகும் வரை தொற்றாளர்கள் ஆம்புலன்ஸ்களில் காத்திருப்பதை தவிர்க்க இந்த பிரத்தியேக வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு காற்றில் இருக்கும் நைட்ரஜனைப் பிரித்து, ஆக்ஸிஜனை மட்டும் அளிக்கும் ‘ஆக்சிஜன் கான்சன்ட்ரேட்டர்’ கருவி மூலம் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தொடர்ந்து அளிக்கப்படுகிறது. இங்கு தொற்றாளர்களின் ஆக்சிஜன் அளவை ஓரளவு சீர்படுத்தி, படுக்கைகள் காலியானவுடன் அங்கு அனுமதிக்கிறோம்.

இருப்பினும், தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் இந்த கூடுதல் வார்டும் போதவில்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in