Published : 11 Dec 2015 09:39 AM
Last Updated : 11 Dec 2015 09:39 AM

வெள்ள பாதிப்புக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய உயர்மட்டக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி வழக்கு: முதல் அமர்வு முன்பு இன்று விசாரணை

சென்னை மழை வெள்ளப் பாதிப்பு களுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்மட்டக் குழு அமைக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன் றத்தில் வழக்கு தொடரப்பட்டுள் ளது. தலைமை நீதிபதி தலைமை யிலான முதல் அமர்வு முன்பு இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ராஜீவ் ராய் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:

சென்னையில் 3 ஆயிரம் நீர் நிலைகள் இருந்தன. அதில், பெரும் பாலானவற்றை ரியல் எஸ்டேட்டு கள் ஆக்கிரமிப்பு செய்துவிட்டன. நவம்பர் 22-ம் தேதியும், டிசம்பர் 1-ம் தேதியும் கனமழை கொட்டி யதால் சென்னை வெள்ளக் காடானது. பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கடல் மட்டமும், சென்னை நிலப் பரப்பும் ஒரே மட்டத்தில் இருப்பது அனைவருக்கும் தெரியும். கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்தது. தொடர் மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடுவது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரி அரசு தலைமைச் செயலாளருக்கு நவம்பர் 29-ம் தேதியே கடிதம் எழுதியிருக்கிறார். ஆனால், டிசம்பர் 1-ம் தேதிதான் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த விஷயத்தில் அதிகாரிகள் தங்கள் கடமையைச் செய்யத் தவறிவிட்டனர்.

ஒரே நேரத்தில் வினாடிக்கு 39 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது. தண்ணீர் திறப்பு குறித்து முதல்நாள் நள்ளிரவில் தகவல் சொன்னதால் பொதுமக்கள் பலருக்கும் அதுபற்றி தெரியவில்லை.

பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றியிருந் தால் இவ்வளவு பெரிய சேதம் ஏற்பட்டிருக்காது. எனவே, அண்மை யில் பெய்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டதற்கான காரணங்கள் என்ன என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதி மன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலை மையில் உயர்மட்டக் குழு அமைக்கவும், இக்குழு, குறிப்பிட்ட கால வரம்புக்குள் செயல் திட்ட அறிக்கை மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும், அறிக்கையில் குறிப் பிடப்படும் பரிந்துரைகளை உயர் நீதிமன்ற கண்காணிப்பில் அமல் படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட் டுள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு முன்பு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x