Published : 10 Dec 2015 09:34 AM
Last Updated : 10 Dec 2015 09:34 AM

சேலம் மாநகராட்சி இணையதளத்தில் பாகிஸ்தான் ஹேக்கர்கள் ஊடுருவல்

‘சேலம் மாநகராட்சியின் இணைய தளத்தை பாகிஸ்தான் ஹேக்கர்கள் ஊடுருவி இருப்பது தெரியவந் துள்ளது.

மத்திய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற் கான ஆய்வுப் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. பெங்களூருவைச் சேர்ந்த ஒரு குழுமத்தினர் சேலத்தில் என்னென்ன மாற்றங்களை செய்ய முடியும் என்று ஆய்வு நடத்தினர்.

பொதுமக்கள், நகரின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலரிடமும் கருத்துகள் பெறப் பட்டு வருகின்றன. தற்போது, ‘smartcitiesproject.com’ என்ற இணையதளம் மூலமாக, சேலம் மாநகராட்சி பகுதிகளில், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் என்னென்ன பணிகள் மேற்கொள்ளலாம் என்று பொதுமக்கள் கருத்துகள் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட் டது.

பொதுமக்கள் இணையதளத் தில் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். இந்த பரபரப்பான நிலையில், சேலம் மாநகர மக்கள் ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகள்குறித்து அறிந்து கொள்ள அவ்வப்போது, சேலம் மாநகராட்சியின் இணையதளத்தை பார்வையிட்டு மாநகராட்சி சார்பில் வெளியிடப்படும் தகவலை அறிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

முடக்கப்பட்ட செய்தி

இந்நிலையில், மாநகராட்சி இணையதளத்தின் ‘NEWS LETTER NEW’ என்ற மெனுவை நேற்று திறந்தவர்களுக்கு கடும் அதிர்ச்சி காத்திருந்தது. ‘NEWS LETTER NEW’ என்ற மெனுவை ஓப்பன் செய்ததும் அதன் முகப்பில், ‘Hacked by Anonymous Spider’ Pak Cybper Attackers என்ற வாசகத்துடன் இணையதளம் முடக்கப்பட்டதாக செய்தி பளிச்சிட்டது.

இணையதளத்தின் ஒரு பகுதி முடக்கப்பட்டிருப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் செல்வராஜிடம் கேட்டபோது, “இந்த தகவல் இப்போதுதான் தெரிகிறது. கணினி புரொகிராமரிடம் இது குறித்து விளக்கம் கேட்கிறேன்” என்றார்.

‘ஸ்மார்ட் சிட்டி’ தொடர்பான கருத்து கேட்பு கூட்டம் குறித்து மக்களுக்கு போதுமான அறிவிப்புகள் வெளியிடப்படாத நிலையில், மக்கள் இணையதளம் மூலமாக தகவல்களை அறிந்து வந்தனர்.

இந்நிலையில், மாநகராட்சி இணையதளத்தின் ‘NEWS LETTER NEW’ மெனுவில் ஹேக்கர்களால் முடக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x