Published : 17 May 2021 03:14 AM
Last Updated : 17 May 2021 03:14 AM

கரோனா ஊரடங்கிலிருந்து பம்புசெட், டிராக்டர் உதிரிபாக கடைகளுக்கு விலக்கு வேண்டும்: டெல்டா விவசாயிகள் எதிர்பார்ப்பு

பம்புசெட் மற்றும் டிராக்டர் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் மற்றும் லேத் பட்டறைகளுக்கு கரோனா ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என டெல்டா விவசாயிகள் அரசை எதிர்பார்க்கின்றனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் பம்புசெட் வசதியுள்ள விவசாயிகள் முன்பட்ட குறுவை சாகுபடியை தற்போது தொடங்கியுள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடிக்கு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணை வழக்க மாக திறக்கப்படும். நிகழாண்டு அணையில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பு உள்ளதால், ஜூன் 12-ம் தேதி அணை திறக்கப்பட வாய்ப்புள்ளது.

இதற்கிடையே, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடு துறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் பம்புசெட் மூலம் பாசனம் பெறும் விவசாயிகள் முன்பட்ட குறுவை நெல் சாகுபடியை தற் போது தொடங்கியுள்ளனர்.

இதில், பல இடங்களில் விதை விதைக்கப்பட்டு, நாற்றுகள் முளைத்து வருகின்றன. வயல் களை உழுது நடவுக்கு தயார் செய்யும் பணிகள் பல இடங்களில் நடைபெற்று வருகின்றன. பல இடங்களில் நடவுப்பணிகள் முடி வடைந்து விட்டன.

முன்பட்ட குறுவை சாகுபடி பாசனத்துக்கு முழுமையாக பம்பு செட்டுகளையே நம்பியுள்ளதால் பம்புசெட்டுகளில் அடிக்கடி பழுது ஏற்படும் நிலை உள்ளது. டிராக்டர்கள், பவர் டில்லர்கள் ஆகியவை யும் அடிக்கடி பழுதாகின்றன.

தற்போது கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ள தால் பழுதடைந்த மின் மோட் டார்கள் மற்றும் டிராக்டர்களை பழுது நீக்க முடியாத சூழல் உள்ளது. எனவே, பம்புசெட், டிராக்டர் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடைகளுக்கு அரசு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்க வேண் டும் என டெல்டா விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து காவிரி டெல்டா விவசாய சங்கங்களின் கூட்ட மைப்பு பொதுச் செயலாளர் ஆறு பாதி கல்யாணம் ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது:

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஏறத்தாழ 1 லட்சம் மின்சார மோட் டார் பம்புசெட்டுகள் உள்ளன. இதன் மூலம் ஏறத்தாழ 3 லட்சம் ஏக்கரில் முன்பட்ட குறுவை சாகுபடி நடைபெறும். இதற்கு தற்போது பல இடங்களில் நிலங்களை உழுது தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு டிராக்டர்களும், மின் மோட்டார்களும் இன்றியமையா ததாகும்.

ஆனால், ஊரடங்கின் காரணமாக அனைத்து கடைகளும் மூடப் பட்டுள்ளதால், திடீரென பழுதாகும் விவசாய மின் மோட்டார்கள் மற்றும் டிராக்டர்களை பழுது நீக்க வசதியாக உதிரி பாகங்கள் வாங்கும் கடைகளோ அல்லது லேத் பட்டறைகளோ தற்போது இல்லை. எனவே, தமிழக அரசு டிராக்டர் மற்றும் மோட்டார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், லேத் பட்டறைகள் மற்றும் மோட்டார் பழுது நீக்கும் கடைகள் ஆகியவற்றை பகல் 12 மணி வரையிலாவது குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் திறக்க நட வடிக்கை எடுக்க வேண்டும்.

அதேபோன்று விவசாய இடுபொருட்களான உரம், பூச்சி மருந்து உள்ளிட்டவற்றை விற்பனை செய்யும் கடைகளை பகல் 12 மணி வரை திறந்து வைக்க வேண்டும். இல்லையேல், விவசாயப் பணிகள் பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x