அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு தனியாக ஒரு பிரிவு; தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக, அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும் என்பது உட்பட பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (மே 16) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழக அரசு, மாற்றுத் திறனாளிகள் எந்தவித சிரமுமில்லாமல், தடுப்பூசி பெறுவதற்கான பின்வரும் சிறப்பு ஏற்பாடுகளை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

* அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத்திறனாளிகள் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி பெறுவதற்கு தனியாக ஒரு பிரிவு தோற்றுவிக்கப்பட வேண்டும்.

* அனைத்து தடுப்பூசி மையங்களிலும் பொது வரிசை அல்லாது மாற்றுத் திறனாளிகளுக்கான தனி வரிசை ஏற்படுத்தப்பட வேண்டும்.

* அனைத்து தடுப்பூசி மையங்களிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுத் தளம் அமைக்கப்பட வேண்டும்.

* தேவைக்கேற்ப மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து செயல்படுத்தப்பட வேண்டும்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in