Published : 16 May 2021 03:14 AM
Last Updated : 16 May 2021 03:14 AM

சம்ஸ்கிருத ஆச்சாரியர் மைசூர் லட்சுமிதாத்தாசார் மறைவு

சம்ஸ்கிருத மொழியில் நவ்ய - நியாய சாஸ்திரத்தில் சிறந்த புலமை பெற்றதற்காகவும் பண்டைய கல்வி முறைக்கும் நவீன அறிவியல் முறைக்கும் பெரிய பாலமாக அமைந்ததற்காகவும் குடியரசுத் தலைவர் விருது பெற்ற சம்ஸ்கிருத ஆச்சாரியர் மைசூர் எம்.ஏ.லட்சுமி தாத்தாசார் (85) முதுமை காரணமாக நேற்று மைசூரில் காலமானார்.

சித்ர துர்காவில் உள்ள அரசுகல்லூரியில் சம்ஸ்கிருத விரிவுரையாளராக தனது பணியை தொடங்கிமேல்கோட்டை சம்ஸ்கிருத ஆராய்ச்சி மையத்தின் இயக்குநராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் எம்.ஏ.லட்சுமி தாத்தாசார்.

மருத்துவம் தொடர்பான 5,000ஓலைச்சுவடிகளை சேகரித்தல்,அதன் கருப்பொருள் குறித்த அட்டவணை, நூலியல் தயாரித்தல், க்ரந்தா, சாரதா சுவடிகளுக்கு சுயவிளக்க மென்பொருள் தயாரித்தல் உள்ளிட்டவை தொடர்பான சொற்பொழிவுகள் ஆற்றியவர்.

முதுநிலை, ஆராய்ச்சி, பிஎச்டி மாணவர்களுக்கு நெறியாளராக இருந்த இவர் உபநிஷத், பாஷ்யம், பிரம்மசூத்ரானி, விசிஷ்டாத்வைதம், மேல்கோட்டை – அன்றும்இன்றும், அறிவியல் தொழில்நுட்பம் – அன்றும் இன்றும் உள்ளிட்டபல நூல்களை எழுதியுள்ளார்.

இந்நிலையில் முதுமை காரணமாக நேற்று காலை மைசூர் கிருஷ்ணமூர்த்தி புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் ஆச்சாரியன் திருவடி அடைந்தார். மேலும் தகவலுக்கு 98801 56839 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

மைசூர் சம்ஸ்கிருத பவுண்டேஷனின் தலைவராகவும் ஐஐஏஐஎம்ஆயுர்வேத கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத் தலைவராகவும் தற்போதுவரை இருந்துவந்தவர் லட்சுமிதாத்தாசார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x