மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் 1.41 லட்சம் குழந்தைகள், சிறார்களுக்கு தட்டம்மை தடுப்பூசி: சுகாதாரத்துறை தகவல்

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் 1.41 லட்சம் குழந்தைகள், சிறார்களுக்கு தட்டம்மை தடுப்பூசி: சுகாதாரத்துறை தகவல்
Updated on
1 min read

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 470 குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு தட்டம்மை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் தூத்துக்குடி மற்றும் கடலூர் மாவட்டங்களில் 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு தட்டம்மை தடுப்பூசி முகாமை தொடங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன்படி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத் தின் பல்வேறு பகுதிகளில் தட்டம்மை தடுப்பூசி முகாம்கள் கடந்த 11-ம் தேதி தொடங்கப்பட்டது.

பின்னர் கடந்த 14-ம் தேதி முதல் கடலூர் மற்றும் தூத்துக்குடியில் முகாம்கள் செயல்படத் தொடங்கின. இந்த முகாம்கள் மூலமாக சுமார் 7.65 லட்சம் குழந்தைகளுக்கு தட் டம்மை தடுப்பூசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. கடந்த 14-ம் தேதி வரை 1 லட்சத்து 41 ஆயி ரத்து 470 குழந்தைகள் மற்றும் சிறு வர்களுக்கு தடுப்பூசி போடப்பட் டுள்ளது. பொதுமக்கள் அருகில் உள்ள முகாம்களுக்குச் சென்று 9 மாதம் நிறைவடைந்த குழந்தைகள் முதல் 15 வயதுக்குட்பட்ட சிறார் களுக்கு தடுப்பூசியை போட்டு தட்டம்மை நோயிலிருந்து தற் காத்துக் கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in