வெள்ள நிவாரணப் பணிக்கு தற்காலிக தனி அமைச்சகம்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

வெள்ள நிவாரணப் பணிக்கு தற்காலிக தனி அமைச்சகம்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
Updated on
1 min read

`தமிழகத்தில் வெள்ள நிவாரணப் பணிகளை முறையாக மேற் கொள்ள தற்காலிகமாக தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண் டும்’ என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று பார்வையிட்டு, மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய வாசன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

தூத்துக்குடி அருகேயுள்ள சோரீஸ்புரம் மற்றும் கோயில் பிள்ளை நகர் ஆகிய பகுதிகளில் 500 பேருக்கு பக்கெட், பாய், போர்வை போன்ற நிவாரணப் பொருட்களை அவர் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

மக்களுக்கு நம்பிக்கையை ஏற் படுத்தும் வகையில், அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து நிவாரணப் பணி களை செய்ய வேண்டும். தன்னார் வலர்கள் அளிக்கும் நிவாரணப் பொருட்களில் தனிநபர் பெயரை, படத்தை ஒட்ட கட்டாயப்படுத்து வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிவாரணப் பொருட்களை முறை யாக வழங்க வேண்டும். இதற்காக தற்காலிகமாக தனி அமைச்சகத்தை ஏற்படுத்த வேண்டும். மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். சென்னை மியாட் மருத்துவமனையில் நோயாளிகள் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும்’ என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in