சிவகங்கையில் 4,02,854 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.80.57 கோடி நிவாரணத் தொகை: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்

சிவகங்கையில் 4,02,854 குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.80.57 கோடி நிவாரணத் தொகை: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்
Updated on
1 min read

‘‘சிவகங்கை மாவட்டத்தில் 4,02,854 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.80.57 கோடி நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது,’’ என ஊரகவளர்ச்சித் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

அவர் இன்று திருப்பத்தூர் அருகே அரளிக்கோட்டை, சிவகங்கை அருகே காஞ்சிரங்கால் உள்ளிட்ட இடங்களில் கூட்டுறவுத்துறை சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 2 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கினார்.

பிறகு அவர் பேசுகையில், ‘ கடந்த அதிமுக ஆட்சியின்போதே கரோனாவால் வாழ்வாதாரம் இழந்தோருக்கு தலா ரூ.5 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டு கொண்டார். ஆனால் ரூ.1,000 மட்டுமே கொடுத்தனர்.

ஆனால் திமுக ஆட்சிக்கு வந்ததும் முதற்கட்டமாக நிவாரணத் தொகையாக ரூ.2,000 வழங்குகிறது. தொடர்ந்து அடுத்தக்கட்டமாக ரூ.2,000 வழங்கப்பட உள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 4,02,854 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.80.57 கோடி நிவாணத் தொகை வழங்கப்படுகிறது, என்று பேசினார்.

மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி, எம்எல்ஏகள் தமிழரசி, மாங்குடி, செந்தில்நாதன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்யசுகுமார், கோட்டாட்சியர்கள் முத்துக்கழுவன், சுரேந்திரன், ஒன்றியக்குழுத் தலைவர்கள் சண்முகவடிவேல், மஞ்சுளாபாலச்சந்தர், ஊராட்சித் தலைவர் மணிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in