கரோனா பேரிடரில் காரைக்குடியில் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தும் இலவச ஆம்புலன்ஸ் சேவை

கரோனா பேரிடரில் காரைக்குடியில் சமூக ஆர்வலர்கள் இணைந்து நடத்தும் இலவச ஆம்புலன்ஸ் சேவை
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சமூக ஆர்வலர்கள் இணைந்து இலவச ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா 2-வது அலையால் தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் காரைக்குடி பகுதியில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது.

இதனால் ஆம்புலன்ஸ் வசதி தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து காரைக்குடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இணைந்து செஞ்சோலை அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இதன்மூலம் சந்தா தொகை வசூலித்து ஆம்புலன்ஸ் வாகனம் வாங்கியுள்ளனர். இந்த வாகனத்தை பயன்படுத்த 50 கி.மீ., வரை எரிபொருள், ஓட்டுநர் கூலி கிடையாது. ஆம்புலன்ஸ் சேவையை 96777 33176, 96777 42819 என்ற எண்களில் அழைக்கலாம்.

இதுகுறித்து செஞ்சோலை அறக்கட்டளை தலைவர் மாறன் கூறுகையில், ‘ இக்கட்டான இக்காலக்கட்டத்தில் ஆம்புலன்ஸ் சேவை அத்யாவசியமான ஒன்றாக மாறிவிட்டது.

இதனால் பொதுமக்களுக்கு உதவும் வகையில் சமூக ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து சந்தா வசூலித்து ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளோம்.

இதை சிகிச்சை தேவைப்படுவோர், இறந்தோர் உடலை எடுத்து செல்ல பயன்படுத்தலாம். ஆனால் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி கிடையாது. பணம் வரவை பொறுத்து படிப்படியாக கூடுதலாக ஆம்புலன்ஸ் வாங்கவும் திட்டமிட்டுள்ளோம்,’ என்று கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in