நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை; மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை

நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை; மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளிலும் பிறஇடங்களிலும் மழை நீடித்தது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

அரபிக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 44, சேர்வலாறு- 23, மணிமுத்தாறு- 6.4, நம்பியாறு- 10, கொடுமுடியாறு- 55, அம்பாசமுத்திரம்- 5, சேரன்மகாதேவி- 15.2, ராதாபுரம்- 10.6, நாங்குநேரி- 20, களக்காடு- 26.4, மூலக்கரைப்பட்டி- 16, பாளையங்கோட்டை- 10, திருநெல்வேலி- 8.

மழை காரணமாக பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 2.40 அடி உயர்ந்து 102.40 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 2187 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 254 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. சேர்வலாறு அணை நீர்மட்டம் 112.33

அடியிலிருந்து, நேற்று ஒரேநாளில் 4 அடி உயர்ந்து 116.40 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 541 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. நீர்மட்டம் 85.50 அடியாக இருந்தது.

புயல் சின்னம் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் கூட்டப்புளி, இடிந்தகரை, உவரி உட்பட 10 மீனவ கிராமங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடற்கரையில் மேடான இடங்களில் படகுகளை பாதுகாப்பாக கொண்டு வைத்திருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in