கரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கும் பணி: இன்று முதல் தொடக்கம்

கரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கும் பணி: இன்று முதல் தொடக்கம்
Updated on
1 min read

கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக வாழவாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்ப அட்டை மூலமாக நிவாரண நிதியாக ரூ.2000 வழங்கும் திட்டம் இன்று முதல் தொடங்குகிறது.

தமிழகத்தில் கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்குக் குடும்ப அட்டைகள் மூலம் ஜூன் 3 அன்று ரூ.4000 நிவாரணம் வழங்கப்படும் எனத் தேர்தல் அறிக்கையில் திமுக கூறியிருந்தது. அதன்படி முதல்வராகப் பொறுப்பேற்ற ஸ்டாலின் முதல் கையெழுத்தாக ரூ.4000 நிவாரணத் தொகை அளிக்கும் திட்டத்தில் கையெழுத்திட்டார்.

அதன் முதல் கட்டமாக இந்த மாதமே ரூ.2000 அளிக்கப்படும், இந்த மாதம் 16ஆம் தேதி வழங்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி தமிழகத்தில் உள்ள 2 கோடியே 7 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன. இன்று முதல் ரூ.2000 நிவாரணம் வழங்கும் பணி தொடங்கியது.

குடும்ப அட்டைதாரர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் கரோனா நிவாரண நிதியைப் பெற்று வருகின்றனர். மாநிலம் முழுவதும் இன்று முதல் ஒரு நாளைக்கு ஒரு கடைக்கு 200 பேர் வீதம் டோக்கன் வரிசைப் பிரகாரம் பணம் வழங்கும் பணி தொடர்ந்து நடக்கிறது.

தொடர்ந்து அடுத்த மாதமும் மீதமுள்ள ரூ.2000 வழங்கும் பணியும் நடக்க உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in