கைதிகளுக்கு மூச்சுப் பயிற்சி, பலூன் ஊதும் பயிற்சி; கோவை சரக சிறைகளில் கரோனா தடுப்புப் பணிகள் தீவிரம்: தடுப்பூசி செலுத்திக்கொண்ட 165 கைதிகள்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

கோவை சரக சிறைகளில், கரோனாதடுப்புப் பணிகளை சிறைத்துறைநிர்வாகத்தினர் தீவிரப்படுத்தியுள்ள னர். கைதிகளின் உடல்நலத்தை மேம்படுத்த பயிற்சியும் அளித்து வருகின்றனர். இதுவரை 165 கைதிகளுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கோவை சரக சிறைத்துறை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கோவை மற்றும் சேலம் ஆகிய இடங்களில் தலா ஒரு மத்திய சிறை உள்ளது. அதேபோல, மாவட்ட சிறைகள், கிளைச் சிறைகள் ஆகியஇரண்டு வகைகளையும் சேர்த்து, கோவை சரகத்தில் மொத்தம் 23 சிறைகள் உள்ளன. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் தினமும் சராசரியாக 2,500-க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்படுவ தால், கோவை சரக சிறைகளில் கரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கோவை சரக சிறைத்துறை டிஐஜி சண்முகசுந்தரம் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது:

சீரான முறையில் சுவாசிக்கவும், உடல் நலத்தை மேம்படுத்தவும், சிறைக் கைதிகளுக்கு முன்னரே யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. கைதிகளின் உடல்நிலையை மேம்படுத்த ஆவி பிடித்தல், மூச்சுப் பயிற்சி, நுரையீரலை பலப்படுத்த பலூன் ஊதும் பயிற்சி உள்ளிட்ட பயிற்சிகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக தினமும் காலை, மாலை குறிப்பிட்ட சில மணி நேரம் பயிற்சி அளிக்கப்படுகிறது. கைதிகளுக்கு தினமும் கசாயமும் வழங்கப்படுகிறது.

கோவை மத்திய சிறையில் 140 கைதிகள், சேலம் மத்திய சிறையில்18 கைதிகள் என 45 வயதுக்கும் மேற்பட்ட 165 கைதிகளுக்கு கரோனா தடுப்பூசியின் முதல் தவணை போடப்பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்பட்ட விசாரணைக் கைதிகள், சிகிச்சை மையத்துக்கு அனுப்பப்படுகின் றனர். மாவட்ட, கிளைச்சிறைகளில் உள்ள கைதிகளை சந்திக்க பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. தொற்றால் பாதிக்கப்படும் சிறைக் காவலர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள ஏதுவாக, சிறை வளாகத்தில் உள்ள பயிற்சிக்கல்லூரி தனிமைப்படுத்திக் கொள்ளும் மையமாக மாற்றப்பட்டுள்ளது.

சிறை மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் இம் மையம் கண்காணிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in