

கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (வெள்ளிக் கிழமை) கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. இதையொட்டி தேவாலயங் களில் நேற்று நள்ளிரவு மற்றும் அதிகாலையில் சிறப்பு திருப்பலி மற்றும் விசேஷ ஆராதனைகள் நடைபெற்றன.
இயேசு கிறிஸ்து ஜெருசலேமில் உள்ள பெத்லகேம் என்ற இடத்தில் ஒரு மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார் என்று கிறிஸ்த வர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டுள்ளது. இயேசு கிறிஸ்து பூமியில் அவதரித்த திருநாளை (டிசம்பர் 25) உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்த வர்கள், கிறிஸ்துமஸ் பெருவிழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
கிறிஸ்துமஸ் தினத்தில் கிறிஸ்தவர் கள் புத்தாடை அணிந்து ஆலயங்களுக் குச் சென்று விசேஷ பிரார்த்தனையில் கலந்துகொள்வர். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தும் கேக் கொடுத்தும் மகிழ்ச் சியை பரஸ்பரம் பரிமாறிக்கொள்வர். வீடுகளில் சிறப்பு விருந்தும் இருக்கும். இந்த நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று (வெள்ளிக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் விசேஷ ஆராதனைகள் நடைபெற்றன.
சென்னை சாந்தோம் பேராலயத்தில் சென்னை மயிலை உயர் மறைமாவட்ட ஆர்ச் பிஷப் ஜார்ஜ் அந்தோணிசாமி இரவு 11.30 மணிக்கு கிறிஸ்துமஸ் திருப் பலி நிறைவேற்றினார். இதில், ஏராள மான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். இதேபோல், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலம், மயிலாப் பூர் பிரகாச மாதா ஆலயம் (லஸ் சர்ச்), ராயப்பேட்டை காணிக்கை அன்னை ஆலயம், எழும்பூர் திரு இருதய ஆண்ட வர் திருத்தலம், புதுப்பேட்டை புனித அந்தோணியார் ஆலயம், பாரிமுனை தூய மரியன்னை இணை பேராலயம், பரங்கிமலை புனித தோமையார் ஆலயம் உள்ளிட்ட கத்தோலிக்க தேவாலயங் களில் நள்ளிரவு கிறிஸ்துமஸ் திருப்பலி நடைபெற்றது. குழந்தை இயேசு மாட்டுத் தொழுவத்தில் பிறந்ததை நினைவுகூரும் வகையில் ஆலயங்களில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன.
சிஎஸ்ஐ திருமண்டல தலைமை ஆலய மான கதீட்ரல் பேராலயம், மிகவும் பழமை வாய்ந்த வேப்பேரி புனித அந்திரேயா ஆலயம், மயிலாப்பூர் குட்ஷெப்பர்டு ஆலயம், ராயப்பேட்டை வெஸ்லி ஆலயம், எழும்பூர் புனித திருமுழுக்கு யோவான் ஆலயம் உள்ளிட்ட சிஎஸ்ஐ ஆலயங்களிலும் நள்ளிரவு கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. திருப்பலி மற்றும் சிறப்பு ஆராதனைகளில் கலந்துகொண்ட கிறிஸ்தவர்கள் பரஸ்பரம் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறி மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர். ஆலயத்துக்கு வந்த அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது.
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன் னிட்டு நள்ளிரவில் இருந்தே தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடப்பதால் ஆயிரக்கணக்கில் மக்கள் ஒரே இடத்தில் கூடுவார்கள். இதனால், சென்னையில் உள்ள சாந்தோம், எழும்பூர் கதீட்ரல், ராயப்பேட்டை வெஸ்லி உட்பட பல முக்கிய தேவாலயங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை புறநகர் பகுதிகளிலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தாம்பரம் பாத்திமா அன்னை ஆலயம், பெருங்களத்தூர் குழந்தை இயேசு ஆலயம், ஊரப்பாக்கம் ஆரோக்கிய அன்னை ஆலயம், கூடுவாஞ்சேரி நல்மேய்ப்பர் ஆலயம், காட்டாங்குளத்தூர் புனித லூர்து அன்னை ஆலயம், மறைமலை நகர் தூய விண்ணரசி அன்னை ஆலயம் உள்ளிட்ட ஆலயங்களில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். ஆலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
தமிழகத்தின் புகழ்பெற்ற திருத்தலங் களான வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா ஆலயம். பூண்டி மாதா திருத்தலம், தூத்துக்குடி பனிமயமாதா ஆலயம், கோட்டாறு புனித சவேரியார் ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு மற்றும் அதிகாலையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனையில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.