Last Updated : 14 May, 2021 10:16 PM

 

Published : 14 May 2021 10:16 PM
Last Updated : 14 May 2021 10:16 PM

அதிமுக, திமுக ஆட்சியில் மதுரைக்கு தொடர்ந்து அமைச்சராகும் தியாகராசர் கல்லூரி முன்னாள் மாணவர்கள்

தமிழக அரசியலில் சபாநாயகர் பதவி மற்றும் மதுரைக்கு தொடர்ந்து அமைச்சர் பதவியிலும் மதுரை தியாகராசர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் இடம் பெறுவது பெருமை அளிக்கிறது என, முன்னாள் பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக அமைச்சரவையில் தென்மாவட்டத்திற்கென அதிக முக்கியத்துவம் எப்போதும் உண்டு. சபாநாயகர், நிதி, உள்ளாட்சி, வருவாய், கூட்டுறவு, மீன்வளம், சுற்றுலா, இந்து சமய அறநிலையம், ஆதிராவிடர் நலம்,மின்சாரம், வனம், கல்வி என, முக்கியத்தவம் வாய்ந்த துறைகளிலும்தென்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருந்துள்ளனர்.

அந்த வகையில் மதுரை தியாகராசர் கலை, அறிவியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பல்வேறு துறைகளில் சாதித்தாலும், அரசியலிலும் சாதனை படைத்துள்ளனர்.

இதன்படி, இக்கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர்களான காளிமுத்து சபாநாயகர், அமைச்சராகவும், சேடப்பட்டி முத்தையா சபாநாயகர், எம்பியாகவும் இருந்துள்ளனர். தற்போது திமுக எம்பியாக இருக்கும் தமிழச்சி தங்கப்பாண்டியனும் இக்கல்லூரி முன்னாள் ஆங்கிலத்துறை மாணவி.

முன்னாள் சபாநாயகர் காளிமுத்து இக்கல்லூரியில் தமிழ் இலக்கிய மும், சேடபட்டி முத்தையா கணிதமும் படித்துள்ளனர். இவர்களை தொடர்ந்து இதே கல்லூரியில் பிஎஸ்சி இயற்பியல் படித்த செல்லூர் கே. ராஜூ இருமுறை கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்துள்ளார் தகவல் தொழில் நுட்பம், விளையாட்டு, இருமுறை வருவாய்த் துறை அமைச்சராக ஆர்பி. உதயக்குமார் பிகாம் படித்தார்.

ஒரே கல்லூரியில் படித்த இருவரும் அதிமுக அமைச்சரவையில் தொடர்ந்து 10 ஆண்டுகளாகப் பணியாற்றி பெருமை சேர்த்த இவர்களை கல்லூரி தலைவர் கருமுத்து கண்ணன், செயலர் ஹரி தியாகராஜன் ஆகியோரும் அவர்களை கல்லூரி விழாக்களுக்கு அழைத்து கவுரப்படுத்தி உள்ளனர்.

இந்நிலையில் 2021தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தபோதிலும், இந்த அமைச்சரவை பட்டியலில் மதுரை மாவட்டத்திற்கென மதுரையைச் சேர்ந்த பிடி. பழனிவேல் தியாகராசன் (நிதித் துறை) பி. மூர்த்தி (வணிகவரி, பத்திரபதிவுத்துறை) இடம் பெற்றுள்ளனர். இவர்களில் அமைச்சர் பி. மூர்த்தி மதுரை தியாகராசர் கல்லூரியின் முன்னாள் மாணவர்.

இவர் இக்கல்லூரியில் பி.ஏ., பொருளாதாரம் படித்துள்ளார். இவரது சொந்த ஊர் மதுரை அருகிலுள்ள வெளிச்சநத்தம். கடந்த 2006-ம் ஆண்டு சோழவந்தான் தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ. ஆனார். அதன்பின் 2016- தேர்தலில் மதுரை கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றார். மீண்டும் அதே தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராகி இருக்கிறார்.

முன்னாள் பேராசிரியர் ஒருவர் கூறுகையில், ‘‘இக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் தமிழக அமைச்சர்வையில் இடம் பெற்று பணியாற்றுவது, பெருமை அளிக்கிறது.

அமைச்சர்களாக இருந்த காளிமுத்து, சேடபட்டி முத்தையா, செல்லூ் ராஜூ, ஆர்பி. உதயகுமார் போன்றவர்கள் கல்லூரி விழாக்களில் பங்கேற்கும்போது, அவர்களை அறிமுகப் படுத்தி மாணவர்களுக்கு உற்சாகப்படுத்தி இருக்கிறோம்.

தமிழக அரசியலில் அதிமுக, திமுக ஆட்சியில் அமைச்சரவை பட்டியலில் தொடர்ந்து தங்களது கல்லூரி முன்னாள் மாணவர்கள் இடம் பெறுவது பெருமை அளிப்பதாக இருக்கிறது,’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x