Published : 14 May 2021 08:41 PM
Last Updated : 14 May 2021 08:41 PM

வரும் 17-ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள இ-பதிவு கட்டாயம்

வரும் 17ம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள இ-பதிவு கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இனி தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனைத்து காய்கறி, இறைச்சி மற்றும் மளிகைக் கடைகள் இயங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் தேநீர்க் கடைகளுக்கு அனுமதியில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 17 முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவு அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பதிவு தொடர்பாக முதல்வர் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது

*வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும்.

* அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ- பதிவு முறை கட்டாயமாக்கப்படும்.

* இ-பதிவு முறை 17.05.2021 காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும். ஏற்கெனவே அறிவித்தவாறு மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x