Last Updated : 14 May, 2021 06:56 PM

 

Published : 14 May 2021 06:56 PM
Last Updated : 14 May 2021 06:56 PM

கரோனா ஒழிப்பு நடவடிக்கையை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: வல்லுநர்கள் கலந்தாய்வில் அரசுக்கு வேண்டுகோள்

மதுரை

கரோனா ஒழிப்பு நடவடிக்கையை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என வல்லுனடர்களுடன் கலந்தாய்வுக் கூட்டத்தில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் நாட்டை காப்போம் அமைப்பு சார்பில் கரோனா தடுப்பு குறித்து சமூக ஆய்வாளர்கள், சமூக செயல்பாட்டாளர்கள், முக்கிய துறை வல்லுனர்களுடான கலந்தாய்வு நடைபெற்றது. அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.சே.ராஜன் தலைமை வகித்தார்.

தமிழ்நாடு கத்தோலிக்க ஆயர் பேரவை தலைவரும், மதுரை உயர் மறைமாவட்ட பேராயருமான அந்தோனி பாப்புசாமி, உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அஜ்மல்கான், வழக்கறிஞர் லஜபதிராய், மதுரை கல்லூரி முன்னாள் முதல்வர் முரளி, மனித உரிமை கல்வி நிறுவன இயக்குனர் தேவசகாயம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

பின்னர் ராஜன் கூறுகையில், தமிழகத்தில் பொதுமக்கள் மத்தியில் கரோனா ஆபத்துகள் பற்றியும், குறிப்பாக இரண்டாவது அலை பற்றியும் தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்து வரும் முயற்சிகள் ஊக்கமளிப்பதாக இல்லை. வட இந்தியாவில் கரோனாவால் ஏற்பட்டுள்ள அழிவால் தமிழகத்தில் கரோனா குறித்த பயம், பதட்டம் அதிகரித்துள்ளது.

கரோனா நெருக்கடியை கையாள முந்தைய அதிமுக அரசு பின்பற்றிய அணுகுமுறை 25 சதவீத வெற்றியை மட்டுமே அளித்தது. இதனால் கரோனா 2-ம் அலையை திறம்பட கையாண்டு, கரோனா 3-ம் அலையை முன்கூட்டியே எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.

தமிழகத்தில் கரோனாவுக்கு எதிராக தமிழ் மக்கள் இயக்கத்தை உருவாக்க வேண்டும். இந்த இயக்கத்தின் மூலம் கரோனா பரவலை தடுக்க கூட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

கரோனா பரவலை தடுக்க ஊராட்சி அடிப்படையிலான மக்கள் இயக்கம், மக்களின் வாழ்வதார தேவைகளை நிறைவேற்றல், மக்களின் தன்னம்பிக்கையை வளர்ப்பது, சிறப்பு சட்டப் பேரவை அமர்வு கூட்டுவது, தமிழக மக்கள் கரோனா நிதி திட்டம், கரோனா தன்னார்வ படை, சுகாதார வளங்களை கூட்டுதல், சுகாதார வளங்களுக்கான விலைகளை நிர்ணயம் செய்தல், நாட்டு மருத்துவத்தின் பயன்பாடு அதிகரித்தல், மக்கள் உணர்வுகளை மதிக்கும் நட்புமிகு நிர்வாகத்தை ஏற்படுத்தல், தகவல் மற்றும் கண்காணிப்பு மையம் உருவாக்குதல், அரசு ஊடக நட்பு கொள்கை வகுத்தல், டாஸ்மாக் கடைகள் திறக்கும் நாளின் எண்ணிகை்கைய குறைத்தல் ஆகியன 15 செயல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

மத்திய அரசு புதிதாக நாடாளுமன்றம் கட்டுவதை நிறுத்திவிட்டு, அதற்கான பணத்தை கரோனா நிவாரணத்துக்கு பயன்படுத்த வேண்டும். பிரதமர் பராமரிப்பு நிதியிலிருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய நியாயமான பங்கு தொகையை வழங்க வேண்டும், கரோனா தொடர்பான அனைத்து சுகாதார பொருட்களுக்கும் ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்க வேண்டும். இதற்காக மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x