

இஸ்லாமியர்கள் தங்கள் வீடுகளிலேயே பாதுகாப்புடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடி மகிழ வேண்டும் என்று சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ரம்ஜான் பண்டிகை இன்று (மே 14) கொண்டாடப்படுவதை ஒட்டி பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய சமுதாயத்தின் சார்பில் அரசுக்கு கோரிக்கை வந்துள்ளது. கரோனா 2-வது அலை தீவிரமாக பரவி வருவதால், முழுஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவலைத் தடுக்கதீவிர நடவடிக்கை எடுத்து வரும்முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘முழு ஊரடங்கை முழுமையாக கடைபிடிப்பீர்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த தருணத்தில் அனைத்து சமயங்களைச் சேர்ந்தவர்களும், மதம் சார்ந்த விழாக்களை தவிர்த்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர்.
சிறுபான்மையின மக்கள் மீதுதிமுகவுக்கு இருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நன்குஅறிந்த இஸ்லாமிய பெருமக்கள்அனைவரும், ரம்ஜான் பண்டிகையை தங்கள் இல்லங்களிலேயே அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளைக் கடைபிடித்து கொண்டாடி மகிழுங்கள்.
இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.