வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு மகிளா வங்கி ரூ.20 லட்சம் கடன்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு மகிளா வங்கி ரூ.20 லட்சம் கடன்
Updated on
1 min read

மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்ட சாலையோர வியாபாரிகள் 100 பேருக்கு பாரதிய மகிளா வங்கி சார்பில் ரூ.20 லட்சம் கடன் வழங்கப்பட்டது.

சென்னையில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணா சாலையில் உள்ள பாரதிய மகிளா வங்கியில் நேற்று நடந்தது. இதில், சாலையோர வியாபாரிகள் 100 பேருக்கு ரூ.20 லட்சம் கடன் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வங்கியின் தலைமை மேலாளர் பால கார்த் திகா பேசியதாவது:

வெளிநாடுகளில் அனைவருக் கும் காப்பீடு வசதி உள்ளது. இத னால் எதிர்பாராத இயற்கைச் சீற்றம், இழப்பு போன்ற சூழ்நிலைகளில் காப்பீடு தொகை பெற்று சமாளிக் கின்றனர்.

நம் நாட்டில் காப்பீடு வசதியை 10 சதவீதம் பேர் மட்டுமே பயன்படுத்துகின்றனர். இதன் அருமை தெரியாமல் பலர் தயங்கு கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாடு உடல் உழைப்பு மற்றும் இதர அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியங்கள் செயலாளர் என்.பாலசந்திரன், தமிழ்நாடு சாலையோர வியாபாரத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு தேசிய செயற்குழு உறுப்பினர் வீ.மகேஸ்வரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in