Published : 28 Dec 2015 04:05 PM
Last Updated : 28 Dec 2015 04:05 PM

பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்கும்: தமிழிசை சவுந்தரராஜன்

மத்திய அரசு பணிகளில் பிற் படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக் கீட்டின் பலன்கள் முழுமையாக கிடைக்காததற்கு காங்கிரஸும், திமுகவும்தான் பொறுப்பேற்க வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சத விகித இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்து 20 ஆண்டுகள் ஆகியும், மத்திய அரசு பணிகளில் 12 சதவீதத் துக்கும் குறைவாகவே பிற்படுத்தப் பட்டோர் பணியாற்றி வருவதாக திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கிரீமிலேயர் முறையை நீக்க சட்டத்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றும், பிற்படுத்தப்பட் டோர், எஸ்.சி., எஸ்.டி. பிரிவி னருக்கு வழங்கப்பட்ட பணியிடங் களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இட ஒதுக்கீட்டின் பலன்கள் உரியவர்களுக்கு முழுமையாக சென்றடைய வேண்டும் என்பதே பாஜகவின் கொள்கை. கருணாநிதி குறிப்பிடும் 20 ஆண்டுகளில் பெரும்பாலான ஆண்டுகள் காங்கிரஸ்தான் ஆட்சியில் இருந்தது. சுமார் 15 ஆண்டுகள் மத்திய அரசில் திமுக செல்வாக்குடன் அங்கம் வகித்தது. அப்போது இதற்காக கருணாநிதி குரல் கொடுக்காதது ஏன்?

இட ஒதுக்கீட்டு பலன்கள் பிற்படுத்தப்பட்டோருக்கும் முழு மையாக கிடைக்காததற்கு காங்கி ரஸும், திமுகவும்தான் பொறுப் பேற்க வேண்டும். பாஜக ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள்தான் ஆகிறது. இட ஒதுக்கீட்டை முழுமை யாக நடைமுறைப்படுத்த பாஜக அரசு நடவடிக்கை எடுக்கும்.

ஜல்லிக்கட்டு நடக்கும்

ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடையை நீக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். எனவே, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்கும்.

நவீன நகரங்கள் திட்டத்துக்கான விவரங்களை கடந்த டிசம்பர் 15-க்குள் மத்திய அரசுக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு அது குறித்து எந்த விவரத்தையும் அனுப்பவில்லை. தமிழகத்துக்கு திட்டங்களை நிறைவேற்ற மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்.

உடன்பாடு இல்லை

தேமுதிக தலைவர் விஜய காந்த் செய்தியாளர்களிடம் நடந்து கொண்ட விதத்தில் எங்க ளுக்கு உடன்பாடு இல்லை. செய்தி யாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பது ஜனநாயகத்தின் அங்கமாகும். ஏனெனில் செய்தி யாளர்களின் வழியாகவே மக்க ளுக்கு செய்தி சென்று சேருகிறது. விஜயகாந்தின் நல்ல செயல்கள் பாராட்டும் அதே நேரத்தில் சில தவறுகளை சுட்டிக்காட்டவும் பாஜக தயங்கியதில்லை.

இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x