

தமிழகத்தில் 1.54 கோடி குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கள் வழங்கப் பட்டுள்ளதாக அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்தார்.
தமிழக அரசின் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்ட செயல்பாடுகளை, செய்தி மற்றும் சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:
அரிசி பெற தகுதியுள்ள குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்களுக்கு இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்க கடந்த 2011-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி முதல்வர் உத்தரவிட்டார். கடந்த ஆண்டு வரை 4 கட்டங்களாக 1.40 கோடி குடும்பங்களுக்கு இந்தப் பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு ஐந்தாவது கட்டமாக 45 லட்சம் குடும்பங்களுக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.
இதுவரை 1.54 கோடி குடும்பங்களுக்கு ரூ.8,870 கோடியில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கப்பட்டுள்ளது. மாவட் டங்களுக்கு அனுப்பப்படும் பொருட்கள் உடனடியாக பயனாளிகளுக்கு வழங்கப்படும். பொருட்களை வழங்க காலதாமதம் செய்யக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.