

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரியின் கல்லூரிக்கு எதிராக, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் காங்கிரஸ் எம்பிக்களுக்கு புகார் கடிதம் அனுப்பி உள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் அரிகரசுதன்.
இவர் கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலுள்ள தமிழக காங் கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரிக்குச் சொந்தமான காமராசர் மரைன் சயின்ஸ் அன்டு டெக்னாலஜி கல்லூரியில் 2019-ல் டிப்ளமோ படிப்பில் (6 மாதம்) சேர்ந்துள்ளார்.
இந்நிலையில் அவர் கே.எஸ். அழகிரி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், மாணிக்கம்தாகூர், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ளதாவது: எனது பெற்றோர் தினக்கூலி வேலை செய்யும் சூழலில், நான் உங்கள் (கே.எஸ்.அழ கிரி) கல்லூரியில் சேர்ந்து படித் தேன். கல்லூரியில் சரியான கட்ட மைப்பு வசதி இல்லை என, மும்பையிலுள்ள கப்பல்துறை இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி அதன் உரிமத்தை ரத்து செய்தது.
அதன் பின்பும், என்னை போன்ற ஏழை மாணவர்களை கல்லூரியில் சேர்த்து பணம் வாங்கிக் கொண்டு, செல்லாத சான்றிதழ்களை வழங்கினீர்கள்.
அனுமதி ரத்தை எதிர்த்து நீங்கள் நீதிமன்றம் சென்றபோது, சான்றிதழ் செல்லாத நிலையில், மாணவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தில் 50 சதவீதத்தை திருப்பி வழங்க உத்தரவிட்டும் இதுவரை எங்களுக்கு வழங்க வில்லை.
எனது தந்தை புற்றுநோயால் அவதிப்படுகிறார். தாயார் தினக் கூலிக்கு சென்று குடும்பத்தை கவனிக்கிறார். நான் டிப்ளமோ படித்தும் வேலைக்கு போக முடி யவில்லை. என்னைப் போன்று பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீதிமன்ற உத்தரவுப்படி வேறு கல்லூரியில் படிக்க உதவி செய்வதோடு, நாங்கள் செலுத்திய கட்டணத்தில் 50 சதவீதத்தை திரும்ப வழங்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் எம்பிக்களான நீங்கள், ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் இத்தகவலை தெரிவித்து எங் களுக்கு நியாயம் கிடைக்க வழி செய்யுங்கள். இவ்வாறு அக்கடிதத்தில் குறிப் பிட்டுள்ளார்.