Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM

தஞ்சாவூர் மாவட்டத்தில் உளுந்து அறுவடை தீவிரம்: நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி

தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை யில் சாகுபடி செய்யப்பட்ட உளுந்து பயிறு தற்போது பரவ லாக அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்பட்ட உளுந்து பயிறுக்கு நல்ல விலை கிடைப்பதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காவிரி டெல்டா பகுதிகளில் ஆண்டுதோறும் சம்பா, தாளடி சாகுபடிக்கு பிறகு, பரவலாக உளுந்து சாகுபடி செய்யப்படும். மேலும், பேராவூரணி, சேதுபாவா சத்திரம் உள்ளிட்ட சில இடங் களில் தென்னந்தோப்புகளில் ஊடு பயிராகவும் உளுந்து சாகுபடி செய்யப்படுகிறது. உளுந்து பயறு விதைப்பு செய்யப்பட்ட 70 நாட்களில் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராகி விடும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தை, மாசி, பங்குனி, சித்திரை பட்டங் களில் வம்பன்-8, ஆடுதுறை-5 உள்ளிட்ட உளுந்து ரகங்கள் பரவலாகப் பயிரிடப்படுகின்றன. அதன் படி, மாவட்டத்தில், தஞ்சாவூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை, மதுக்கூர், பூதலூர், திருவையாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பில், கோடை சாகுபடியாக உளுந்து பயிறு சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அவை தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே, மத்திய அரசு மார்ச் மாதம் உளுந்துக்கான குறைந்தபட்ச ஆதார விலையாக கிலோவுக்கு ரூ.60 என அறிவித்தது. இதையடுத்து, தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம் ஆகிய இடங்களில் உள்ள வேளாண்மைத் துறையின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில், விவசாயி கள் தாங்கள் விளைவித்த உளுந்தை விற்பனை செய்யலாம் என ஆட்சியர் ம.கோவிந்தராவ் அறிவித்திருந்தார்.

தற்போது வெளிச்சந்தையில் உளுந்து கிலோ ரூ. 70 முதல் 90 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. நல்ல விலை கிடைப்பதால் உளுந்து பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், உளுந்து அறுவடை செய்யும் விவசாயிகள் அவற்றை வேளாண் மைத் துறையின் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்கு கொண்டு செல்லாமல், தனியார் வியாபாரிகளிடம் விற்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x