

தமிழகம் முழுவதும் நாளை (டிச.12) நடைபெறும் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சுமார் 7 லட்சம் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
இந்தாண்டு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்ட மாத அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 6.82 லட்சம் வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுவிட்டன என்று மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலர் ஆர்.எம்.டி.டீக்கா ராமன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக சென்னையில் நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:-
இந்தாண்டு கடந்த 8 மாதங்களில் நடந்த மாத அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றத்தில், நீதிமன்றத் துக்கு வராத 4.01 லட்சம் வழக்கு கள், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 2.80 வழக்குகள் ஆகமொத் தம் 6.82 வழக்குகள் விசாரித்து முடிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர் களுக்கு ரூ.1608.06 கோடி வழங்கப் பட்டது.
ஆண்டுக்கு ஒருமுறை தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்படும். அதன்படி, இந்தாண்டுக்கான தேசிய மக்கள் நீதிமன்றம் டிசம்பர் 12-ம் தேதி கூடுகிறது. தமிழ்நாடு முழுவ தும் 375 அமர்வுகளாக சுமார் 7 லட்சம் வழக்குகள் விசாரிக்கப்பட வுள்ளன. கீழமை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 5 லட்சம் வழக் குகளில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகள் நிலுவையில் உள்ள 2,62,949 வழக்குகளும், சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 2190 வழக்குகளும் விசாரிக் கப்படவுள்ளன.
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஜாமீன் வழக்குகளும், விவாகரத்து வழக்கில் நிவாரணம் கோரும் வழக்குகளும் விசாரிக்கப்பட மாட் டாது. விவாகரத்து வழக்குகளைப் பொருத்தவரை இருவரும் சேர்ந்து வாழ விரும்பினால் அதற்கான முயற்சிகள் மட்டும் மேற்கொள்ளப் படும்.
இவைதவிர, வாகன விபத்து இழப்பீட்டு வழக்கு, தொழிற் தகராறு, நிலம் கையகப்படுத்துதல், மின்சாரம், குடிநீர் கட்டணம், சிவில் வழக்கு உட்பட 20 வகையான வழக்குகள் விசாரிக்கப்படும்.
உயர் நீதிமன்றத்தின் பாதுகாப்பு மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை கட்டுப்பாட்டில் இருப்பதால், தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கு வருவோரின் வசதிக்காக டிச.12-ம் தேதி மட்டும் எஸ்பிளனேடு காவல்நிலைய நுழைவு வாயில் (கேட் நம்பர் 5) பகுதியில் நுழைவு அனுமதிச் சீட்டு வழங்குவதற்காக 10 சிறப்பு கவுன்ட்டர்களும், வழக்காடிகளின் வசதிக்காக மூன்று உதவி மையங்களும் (ஹெல்ப் டெஸ்க்) திறக்கப்படுகின்றன.
இவ்வாறு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு உறுப்பினர் செயலர் ஆர்.எம்.டி. டீக்கா ராமன் தெரிவித்தார்.