உயிரைப் பணயம் வைத்து உன்னத பணியாற்றும் செவிலியர் என்றைக்கும் போற்றப்பட வேண்டியவர்கள்: தினகரன்

டிடிவி தினகரன்: கோப்புப்படம்
டிடிவி தினகரன்: கோப்புப்படம்
Updated on
1 min read

உயிரைப் பணயம் வைத்து உன்னத பணியாற்றும் செவிலியர் என்றைக்கும் போற்றப்பட வேண்டியவர்கள் என, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, டிடிவி தினகரன் இன்று (மே 12) தன் ட்விட்டர் பக்கத்தில், "மருத்துவத்துறையில் மகத்தான பணியாற்றும் செவிலியர் அனைவருக்கும் நெஞ்சார்ந்த செவிலியர் தின வாழ்த்துகள்.

கரோனா பேரிடர் போன்ற நெருக்கடியான சூழலிலும் தங்களின் துன்பங்களை எல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, உயிரைப் பணயம் வைத்து உன்னத பணியாற்றும் செவிலியர் என்றைக்கும் போற்றப்பட வேண்டியவர்கள்.

அபாயகரமான சூழலில் எத்தனையோ பேரின் உயிரைக் காப்பாற்ற உழைக்கும் செவிலியர், மருத்துவர்கள் உட்பட மருத்துவ துறையில் இயங்கும் முன்களப் பணியாளர்கள் திடீரென உயிரிழக்கும் போது அவர்களது குடும்பம் நிர்க்கதியாவதைத் தடுப்பதற்கு 'கார்ப்பஸ் ஃபண்ட்' (Corpus Fund) நிதியை உருவாக்க வேண்டும் என்ற அவர்களது நீண்ட கால கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்றித் தர வேண்டும்.

மேலும், மருத்துவர்கள், செவிலியருக்கு மத்திய அரசு வழங்குவதற்கு இணையான ஊதியத்தை தமிழக அரசும் வழங்கிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in