

பாமக சட்டப்பேரவை குழுத் தலைவராக அக்கட்சித் தலைவர் ஜி.கே.மணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாமக சட்டப்பேரவைக் குழு நிர்வாகிகள் நேற்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் விவரம்: தலைவர் ஜி.கே.மணி, (பென்னாகரம் தொகுதி), துணைத் தலைவர் எஸ்.பி.வெங்கடேஸ்வரன் (தருமபுரி), கொறடா இரா.அருள் (சேலம் மேற்கு), செயலாளர் எஸ்.சதாசிவம் (மேட்டூர்), துணைச் செயலாளர் சி.சிவக்குமார் (மயிலம்).
பாமக சட்டப்பேரவைக் குழு நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைவரும் சிறப்பாக பணியாற்ற அக்கட்சி நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்று அக்கட்சியின் தலைமை நிலையம் தெரிவித்துள்ளது.