Last Updated : 12 May, 2021 03:14 AM

 

Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை எதிர்பார்ப்பால்: புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்போர் அதிகரிப்பு

கோவை தெற்கு தாலுகா அலுவலகத்தில், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக் கவும், தயாரான கார்டுகளை பெற்றுச் செல்லவும் நேற்று வரிசையில் காத்திருந்த பொதுமக்கள். படம்:ஜெ.மனோகரன்

கோவை

அரசின் கரோனா கால நிவாரணத் தொகை, குடும்ப தலைவிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவற்றால்,புதிய ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பிப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நியாய விலைக்கடைகள் மூலமாக அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை, பாமாயில்உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் கள் விநியோகிக்கப்படுவது மட்டுமின்றி, பொங்கல் பரிசு, கரோனாநிவாரணம் உள்ளிட்டவை ரொக்கமாகவும் வழங்கப்படுகின்றன.

கடந்தாண்டு அரசு சார்பில், கரோனா நிவாரண நிதியாக ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. நடந்து முடிந்த சட்டப் பேரவை தேர்தலில், திமுக தேர்தல் அறிக்கையில் கரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் மற்றும்குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந் தது. அதன்படி, திமுக ஆட்சி அமைந்ததும், கரோனா நிவாரண தொகையில் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் மே மாதமே வழங்கப்படும் எனமுதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான டோக்கன் வழங்கும்பணி ரேஷன் கடைகள் மூலமாக தற்போது நடைபெற்று வருகிறது.

விரைவில் குடும்ப தலைவிகளுக்கான உதவித் தொகையும் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது. இதன்காரணமாக, கோவை மாவட்டத்தில் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுதொடர்பாக மாவட்ட வழங்கல் துறையின் உயரதிகாரி ஒருவர் கூறும்போது, “மாவட்டத் தில் 1,410 ரேஷன் கடைகள் உள்ளன. மொத்தம் 10 லட்சத்து 25 ஆயிரத்து 103 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அரசின்நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தைத் தொடர்ந்து புதியரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பிப் போரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக தினமும் ஏராளமானோர் வந்து கேட்டுச் செல்கின்றனர்.

ஒரே குடும்ப அட்டையில் கூட்டுக் குடும்பமாக பெயர் உள்ளவர்கள், புதிதாக திருமணமான தம்பதியர்,இதுவரை புதிய ரேஷன் கார்டுக்குவிண்ணப்பிக்காதவர்கள் உள்ளிட் டோர், தற்போது ஆர்வத்துடன் இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பித்து வருகின்றனர். மாதம் சராசரியாக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வருகின்றன. இ-சேவை மையம் மட்டுமல்லாமல், இணையதளம் மூலம்பொதுமக்களே நேரடியாக உரியஆவணங்களுடன் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பிக்கலாம். ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வந்தவுடன், தாலுகா அலுவலகம் மூலம் விநியோகிக்கப்படும். கடந்த அக்டோபர் முதல் ஜனவரி வரையில்மாவட்டத்தில் 25 ஆயிரம் புதிய ரேஷன்கார்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. தற்போது 7 ஆயிரம் ஸ்மார்ட் கார்டுகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x