

சென்னையில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வரும் வெளி மாவட்ட தொழிலாளர்கள் தங்கியுள்ள கீழ்ப் பாக்கம் ஜெ.ஜெ.நகர் கூடைப்பந்து உள் விளையாட்டரங்கில் செய்யப் பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் நேற்று ஆய்வு செய்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னையில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வெளி மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள் வரவழைக்கப்பட் டுள்ளனர். இவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி, கழிப்பறை வசதி போன்றவை செய்து கொடுக்கப்பட் டுள்ளது. மாநகராட்சி சார்பில் டி.டி. தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி, ஓசூர், திருநெல் வேலி, திருச்சி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த 1000 பேர் கீழ்ப்பாக்கம் ஜெ.ஜெ.நகர் கூடைப்பந்து உள் விளை யாட்டரங்கில் தங்கவைக்கப் பட்டுள்ளனர். அவர்களுக்கு செய் யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள், மற்றும் கொடுக்கப் பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் குறித்து மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர், சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர், தொழிலாளர்களை சந்தித்து கேட்டறிந்தனர்.
பின்னர் அங்கு அமைக்கப் பட்டுள்ள மருத்துவ முகாமை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய ஆணையர் விக்ரம் கபூர், பணி முடிவடைந்ததும், அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு தேவையான அனைத்து உதவி களையும் செய்யுமாறு மண்டல அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
சென்னையில் வெள்ள பாதிப்பின்போது துப்புரவு பணியில் ஈடுபட்ட துப்புரவு தொழிலாளர்களுக்கு ஊக்கத் தொகையாக இதுவரை ரூ.5 கோடியே 56 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.