

கரோனா ஊரடங்கால் பால் விற்பனை தனியாருக்கு 30 முதல் 35 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால், ஆவினுக்கு வெறும் 5 சதவீதம் மட்டுமே விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் டீ கடைகள், ஹோட்டல்களுக்கான பால் தேவையைப் பூர்த்தி செய்வதில் தனியார் நிறு வனங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. வீட்டுத் தேவைக்கான பால் விற்பனையில் ஆவின் நிறுவனம் ஆதிக்கம் செலுத்துகிறது.
கரோனா ஊரடங்கால் டீ கடைகள், ஹோட்டல்கள், பேக்கரி கடைகளில் பாலின் தேவை பெருமளவு குறைந்துள்ளது. பெரும்பாலான டீ கடைகள், ஹோட் டல்கள் திறக்கப்படவில்லை. அதனால், தனியார் பால் விற்பனை 30 முதல் 35 சதவீதம் வரை சரிந்துள்ளது. பொதுமக்களின் வீட்டுத் தேவைக்கு விற்பனை செய்வதால் ஆவின் நிறுவனம் 5 சதவீத சரிவை மட்டும் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கரோனா ஊரடங்கால் தனியார் பால் நிறுவனங்களுக்கு விற்பனை சரிந்துள்ளதால் கொள்முதல் விலையைக் குறைக்கத் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் ஆதங்கம் அடைந்துள்ளனர். அதேநேரத்தில் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பால் விலையில் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தாலும் விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்வதையும் கொள்முதல் விலையையும் குறைக்கவில்லை.
இதுகுறித்து அலங்காநல் லூரைச் சேர்ந்த விவசாயி பார்த்திபன் கூறுகையில், ‘‘ஆவின் நிறுவனம் கொள் முதல் விலையைக் குறைக்கவில்லை. ஆனால், தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல் விலையைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. நான் அன்றாடம் கறக்கும் பாலை உள்ளூர் மக்களிடம் விற்றதுபோக தனியாருக்கு விற்கிறேன். லிட்டருக்கு ரூ.32 கொடுத்தனர். தற்போது ரூ.27, ரூ.28-க்கு எடுக்கத் தொடங்கியுள்ளனர். அதனால், நான் தனியார் நிறுவனத்துக்கு பால் விற்பனை செய்வதில்லை. விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை ஆவினுக்கு வழங்க ஆர்வமாக உள்ளனர்,’’ என்றார்.
ஆவின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கரோனா ஊரடங்கால் கடைகள், ஹோட் டல்கள், பேக்கரி விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக் கள், வழக்கம்போல் வீட்டுக்குத் தேவையான பாலை வாங்குகின் றனர்.
அதனால், நுகர்வோரான மக்களை மட்டுமே சார்ந்து விற்பனை செய்யும் ஆவின், கரோனாவால் பெரியளவில் பாதிக் கப்படவில்லை. அதேநேரத்தில் வழக்கமான விற்பனையில் மது ரையில் மட்டும் 10 ஆயிரம் லிட்டர் குறைந்தது. இது மொத்த விற் பனையில் 5 சதவீதம் மட்டுமே,’’ என்றார்.