வேலூரில் அதிக விலைக்கு விற்கப்படும் ஆக்சிஜன் முகக்கவசம்

வேலூரில் அதிக விலைக்கு விற்கப்படும் ஆக்சிஜன் முகக்கவசம்
Updated on
1 min read

வேலூரில் கரோனா நோயாளி களுக்கு பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் முகக்கவசம் அதிகவிலைக்கு விற்பனை செய்யப்படு வதாக புகார் எழுந்துள்ளது.

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை அளிக்கக்கூடிய படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதற்காக, ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அதற்கான கட்ட மைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் முகக்கவசம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆக்சிஜன் படுக்கையில் அனுமதிக்கப் படும் நோயாளிகளிடம் ஆக்சிஜன் முகக்கவசம் தட்டுப்பாடு இருப்பதால் வெளியில் இருந்து வாங்கி தருமாறு கூறி வருகின்றனர். சுமார் ரூ.290 விலையுள்ள இந்த ஆக்சிஜன் முகக்கவசம் உடனே கிடைப்பதில்லை என்றும், தட்டுப்பாடு காரணமாக ரூ.500 பணம் கொடுத்தால் மட்டுமே 4 மணி நேரம் கழித்து மருந்தகங்களில் விற்பனை செய்கின்றனர்.

கூடுதல் பணம் கொடுப்பது டன் அதிக நேரமும் எடுத்துக்கொள் வதால் நோயாளிகளும் அவர்களின் உறவினர்களும் செய்வது தெரியாமல் திணறி வருகின்றனர். ஏற்கெனவே ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வந்திருக்கும் நிலையில் மருந்தகங்களில் பற்றாக்குறை காரணமாக கூடுதல் விலைக்கு விற்கின்றனர். இதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை நோயாளிகளின் உறவினர்கள் முன்வைக்கின்றனர்.

இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத் தரப்பில் விசாரித்தபோது, ‘‘கரோனா தொற்று ஏற்பட்ட நபருக்கு பயன்படுத்திய ஒரு ஆக்சிஜன் விநியோகம் செய்யக் கூடிய முகக்கவசத்தை வேறு ஒரு நபருக்கு பயன்படுத்த முடி யாது. ரப்பர் டியூப் மற்றும் பிளாஸ்டிக்கால் ஆன இந்த ஆக்ஸிஜன் முகக்கவசத்தை மற்றவர்களுக்கு பயன்படுத்தினால் கரோனா தொற்று வேகமாக பரவும் என்பதால் அதை மருத்துவ கழிவில்தான் சேர்க்க முடியும். கடந்த சில நாட்களாக அதிகப்படியான நோயாளிகள் வந்ததால் ஆக்சிஜன் முகக்கவசத்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வெளியில் வாங்கச் சொல்கிறோம். விரைவில், எங்களுக்கு அந்த பொருட்கள் அதிகம் வந்தால் வெளியில் வாங்க வேண்டிய அவசியம் இல்லை’’ எனதெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in