

தமிழகத்தில் வெள்ள பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் மக்களி டம் எழுந்துள்ள கோபம் திமுக வுக்கு ஆதரவாக மாறாது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரி வித்தார்.
மதுரையில் செய்தியாளர் களிடம் நேற்று அவர் கூறியதாவது: உருக்கமாகப் பேசி, வெள்ள பாதிப்பால் கோபத்தில் உள்ள மக்களை சமாதானப்படுத்தலாம் என முதல்வர் ஜெயலலிதா நினைப்பது நடக்காது. இனியும் தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள். வெள்ள பாதிப்புக்கும், மக்களின் துன்பத்துக்கும் ஜெயலலிதாவே பொறுப்பேற்க வேண்டும். 44 நிறு வனங்கள், பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள், பல ஊர்களில் பங்க ளாக்களைத் தனது கட்டுப்பாட் டுக்குள் வைத்துக்கொண்டு, தனக் கென தனி வாழ்க்கை இல்லை என அவர் கூறுவதை யாரும் நம்ப மாட்டார்கள்.
வெள்ள பாதிப்பால் கோபத் தில் உள்ள மக்கள், ஒருபோதும் திமுகவை ஆதரிக்க மாட்டார்கள். திமுக பட்ட மரம். அது இனியும் துளிர்க்காது. யார் எந்த கூட்டணிக் குச் சென்றாலும், திமுகவுக்கு பலன் கிடைக்காது.
முதல்முறையாக வாக்களிக்க வுள்ள இளைஞர்கள், மாணவர் கள், படித்தவர்கள், விவரம் அறிந்த தொழிலாளர்கள் மாற்றத்தை விரும்புகின்றனர். 50 ஆண்டுகளாக திமுக, அதிமுக ஆட்சியில் தமிழகம் சந்தித்த சீரழிவை மாற்ற நினைக்கின்றனர். இந்த மாற்றத்தை தருவதாக பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி கூறுகிறார். அவருக்கு பெருகிவரும் ஆதரவான நிலை, வரும் ஜனவரிக்குப் பின் வாக்கு வங்கியாக மாறும். தகுதியான முதல்வர் வேட்பாளர் இவர் ஒருவர்தான். பாஜக எங்களை ஆதரிக்கும் என நம்புகிறோம் என்றார்.