Published : 11 May 2021 04:07 PM
Last Updated : 11 May 2021 04:07 PM

இந்தியாவில் 1 கோடிக்கும் அதிகமாக கரோனா தடுப்பூசிகளை செலுத்திய 5 மாநிலங்கள்: தமிழகம் பின்னடைவு

இந்தியாவில் இதுவரை மாநிலங்களில் எவ்வளவு எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்ற தகவலை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை தரப்பில் இன்று வெளியிட்ட தகவலில் முதல் ஐந்து இடங்களில் உள்ள மாநிலங்கள் விவரம் பின்வருமாறு,

* மகாராஷ்டிராவில் இதுவரை மொத்தமாக 1, 82, 64, 212 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது இதில் முதல் டோஸ் 1 கோடியே 47 லட்சம் பேருக்கும், இரண்டாவது டோஸ் 34 லட்சத்து 87 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது.

* ராஜஸ்தானில் இதுவரை மொத்தமாக 1, 42,88, 032 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் 1 கோடியே 15 லட்சம் பேருக்கும், இரண்டாவது டோஸ் 27 லட்சத்து 32 ஆயிரம் பேருக்கும் போடப்பட்டுள்ளது.

* குஜராத்தில் இதுவரை மொத்தமாக, 1, 41,60,135 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் 1 கோடியே 7 லட்சம் பேருக்கும்,இரண்டாவது டோஸ் 34 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கும் போடப்பட்டுள்ளது.

* உத்தரப்பிரதேசத்தில் இதுவரை மொத்தமாக, 1,37,60,662 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் 1 கோடியே 9 லட்சம் பேருக்கும், இரண்டாவது டோஸ் 28 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது.

* மேற்கு வங்கத்தில் இதுவரை மொத்தமாக 1,20,35,340 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் டோஸ் 87 லட்சத்து 74 ஆயிர பேருக்கும், 32 லட்சத்து 62ஆயிரம் பேருக்கு போடப்பட்டுள்ளது.

*கரோனா தடுப்பூசி செலுத்துவதில் தமிழகம் தொடர்ந்து பின்னடைவில்தான் உள்ளது. தமிகத்தில் இதுவரை 65,87,081 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 48 லட்சத்து 72 ஆயிரம் பேருக்கு முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 17 லட்சத்துக்கு 41 ஆயிரம் பேருக்கு இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கேரளாவில் 80 லட்சம் பேருக்கும், ஆந்திராவில் 73 லட்சம் பேருக்கும், கர்நாடகாவில் 1 கோடிக்கும் அதிகமானவர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தெலங்கானாவில் 52 லட்சம் பேருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தென்னிந்திய மாநிலங்களை மாநிலங்களை பொறுத்தவரை கரோனா தடுப்பூசி அதிகம் செலுத்திய மாநிலங்களில், தமிழ்நாடு நான்காம் இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் கர்நாடகாவும், இரண்டாவது இடத்தில் கேரளாவும், முன்றாம் இடத்தில் ஆந்திராவும் உள்ளன. தெலங்கானா ஐந்தாம் இடத்தில் உள்ளது

மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசி எண்ணிக்கை அட்டவணை விவரம்:

இதில், தமிழகத்துக்கு இதுவரை 71 லட்சம் கரோனா தடுப்பூசிகள்தான் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைவிட குறைவாக மக்கள் தொகைக் கொண்ட குஜராத்,கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு தமிழகத்தைவிட அதிக எண்ணிக்கையில் தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், தமிழகத்தைவிட விட குறைவாக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களுக்கு கரோனா தடுப்பூசிகள் அதிகம் செலுத்தப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் மத்திய அரசை கேள்வி எழுப்பு வருகின்றனர்.

இந்தியாவில் இதுவரை 17 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x