Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

சீன எல்லையில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் உடல் நல்லடக்கம்

ராணுவ வீரர் பிரகாஷ்.

திருவண்ணாமலை

இந்திய - சீன எல்லையில் உயிரிழந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல் அவரது சொந்த ஊரில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த ஒண்ணுபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்ராணுவ வீரர் பிரகாஷ்(33). இவர்,தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வந்துள்ளார் இந்திய - சீனஎல்லையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது கடந்த வாரம் பனிச்சரிவில்சிக்கி வீர மரணம் அடைந்தார். இதுகுறித்த தகவல் மாவட்ட நிர்வாகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ மரியாதை

இதையடுத்து. அவரது உடல்விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. இதையடுத்து, ராணுவ வாகனத்தில் ஒண்ணுபுரம் கிராமத்துக்கு பிரகாஷ் உடல் நேற்று காலை கொண்டு வரப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. உயிரிழந்த பிரகாஷுக்கு ரேவதி என்ற மனைவியும்,2 வயதில் கவின் என்ற மகனும் உள்ளனர்.

விடுமுறைக்கு சொந்த ஊர் வந்தபிரகாஷ், கடந்த பிப்ரவரி மாதம் பணிக்கு திரும்பியுள்ளார். அவரது தங்கையின் திருமணம் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ளது. தங்கையின் திருமணத்தில் பங்கேற்க விடுமுறை கேட்டு இருப்பதாக பெற்றோர் மற்றும் மனைவியிடம் பேசும்போது பிரகாஷ் கூறியுள்ளார். இந்நிலையில், அவர் உயிரிழந்துள்ளது ஒண்ணுபுரம் பகுதிமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x