

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர் தலில் ‘வசந்தம்’ அணியின் சார் பாக போட்டியிட்ட சிவன் சீனிவாசன் தலைவராக தேர்ந் தெடுக்கப்பட்டார்.
சின்னத்திரை நடிகர் சங்கத்துக் கான தேர்தல் சென்னையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த தேர்தலில் ‘வசந்தம்’ அணி யின் சார்பில் போட்டியிட்ட சிவன் சீனிவாசன் 280 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரவிவர்மா 207 வாக்குகளும், பானு பிரகாஷ் 202 வாக்குகளும் பெற்றனர்.
இந்த தேர்தலில் சின்னத்திரை நடிகர் சங்க செயலாளராக போஸ் வெங்கட், பொருளாளராக சரத் கல்யாண், துணைத் தலைவர்களாக கமலேஷ் மற்றும் வி.சோனியா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.