Published : 15 Dec 2015 08:59 AM
Last Updated : 15 Dec 2015 08:59 AM

திருச்சி மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் மீது பாலியல் புகார்: விசாரணைக்கு காவல் ஆணையர் உத்தரவு

பெண் எஸ்.ஐ-க்கு பாலியல் தொந் தரவு அளித்ததாக நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையர் மீது திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாநகர காவல் துறையின் நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராக இருப்பவர் வெங்கட்ராமன்.

இவர் கடந்த 10-ம் தேதி பெண் எஸ்.ஐ ஒருவரை செல்போனில் தொடர்புகொண்டு, பாலியல் தொல்லை கொடுத்ததாக எஸ்.ஐ.யின் கணவர் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, டிஜிபி, தேசிய மகளிர் ஆணையம் ஆகியோருக்கு தபால் மூலம் புகார் அனுப்பினார்.

அதில், தனது மனைவியிடம், உதவி ஆணையர் தவறாகப் பேசியதாகவும், அந்த பேச்சுக்கள் அடங்கிய சி.டி. தன்னிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். அதைத்தொடர்ந்து மாநகர காவல் ஆணையர் சஞ்சய்மாத்தூருக்கு இ-மெயில், வாட்ஸ் ஆப் மூலம் நேற்று புகார் அளித்தார்.

ஆணையர் விளக்கம்

இதுகுறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு, மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் ஆணையர் ராதிகாவுக்கு காவல் ஆணையர் சஞ்சய்மாத்தூர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து காவல் ஆணையரிடம் கேட்டபோது, “பெண் எஸ்.ஐ.யிடம் இருந்து இதுவரை புகார் வரவில்லை. அவரது கணவர் அளித்த புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார்.

உதவி ஆணையர் மீது பாலி யல் குற்றச்சாட்டு எழுந்துள்ள சம்பவம் திருச்சி மாநகர காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x