

குற்ற வழக்குகளில் தொடர்புடைய வர்கள் எந்த நீதிமன்றத்திலும் சரண் அடையலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லையில் 2011-ம் ஆண் டில் நடைபெற்ற கொலையில் ஐயப்பன், மணி, முருகன், மாரி யப்பன், சுப்பிரமணி ஆகியோ ருக்கு நெல்லை நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியது. அந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி 5 பேரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, வி.எஸ்.ரவி ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது கொலை நடைபெற்ற பிறகு மனுதாரர்களில் 4 பேர் நெல்லை நீதிமன்றத்தில் சரணடைவதற்கு பதில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சரண் அடைந்தது தொடர்பாக கேள்வி எழுந்தது. இதுதொடர்பாக வும் விவாதம் நடைபெற்றது.
இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப் பித்த உத்தரவு: குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் குற்றம் நடைபெற்ற இடத்தில் உள்ள நீதிமன்றத்தில்தான் சரண் அடைய வேண்டும் என்பது இல்லை. எந்த நீதிமன்றத்திலும் சரண் அடை யலாம். அவர்களை நீதிமன்றக் காவலுக்கு அனுப்புவது நீதித் துறை நடுவரின் முடிவுக்கு உட்பட்டது. அவ்வாறு குற்றங்களில் தொடர்பு டையவர்கள் சரண் அடையும் போது தாக்கல் செய்யும் ஆவணங் களை சரிபார்த்து நீதித்துறை நடுவர் முடிவு செய்யலாம். சரணடைய வருவோர் தங்கள் மீதான வழக்கின் முதல் தகவல் அறிக்கையை உடன் எடுத்து வரலாம். போலீஸாரை வைத்து அவர்களை அடையாளம் காட்டச் சொல்லலாம்.
சரண் அடையும் நபரை நீதி மன்ற காவலுக்கு அனுப்ப முடிவு செய்யாவிட்டால், அவரை சம்பந் தப்பட்ட நீதித்துறை நடுவர் மன்றத் தில் சரண் அடைய உத்தரவிட லாம். நீதிமன்ற காவலுக்கு அனுப்ப முடிவு செய்தால், சம்பந்தப் பட்ட மாவட்ட காவல் கண்காணிப் பாளருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க 15 நாள் நீதிமன்ற காவல் காலத்துக்குள் போலீஸார் மனு தாக்கல் செய்யலாம் என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.