Last Updated : 10 May, 2021 03:27 PM

 

Published : 10 May 2021 03:27 PM
Last Updated : 10 May 2021 03:27 PM

தென்காசி மாவட்டத்தில்  கரோனா கட்டுப்பாட்டு அறைகள் தொடக்கம்: தொலைபேசி எண்கள் வெளியீடு

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நகராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கரோனா கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் கரோனா தொற்று நோய் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் பெறவும், கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அரசு நடைமுறைபடுத்தியுள்ள விதிகளை மீறி செயல்படுவோர் தொடர்பான புகார்களை அளிக்கவும் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவசரகால செயல்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது.

04633-290548 அல்லது 04633 -1077 மற்றும் 04633 - 281100, 04633 - 281102, 04633 -281105 ஆகிய தொலைபேசி எண்களில் பொதுமக்கள் எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், தென்காசி மாவட்டத்தில் உள்ள நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள கரோனா கட்டுப்பாட்டு அறையை தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு கரோனா நோய்த் தொற்று தொடர்பான சந்தேகங்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.

தென்காசி (நகராட்சி அலுவலகம்) 04633 - 222228, 04633 - 226999. சங்கரன்கோவில் (நகராட்சி அலுவலகம்) 04636 - 224719, 04636 - 222236. புளியங்குடி (நகராட்சி அலுவலகம்) 9952356001. கடையநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 04633 -240250. செங்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 04633 - 233058. கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 04633 - 250223. வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 04636 - 241327. குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 9442584129. மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 04636 - 290384. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 04633 - 270124. கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் 04634 - 240428.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x