

வாட்ஸ் அப் மூலம் வெளியான முதல்வர் ஜெயலலிதாவின் உரை தற்போது பிஎஸ்என்எல் கைபேசி வாடிக்கையாளர்களுக்கு வாய்ஸ் மெயிலில் செல்கிறது.
தமிழகத்தில் வெள்ள பாதிப்புகள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முதல்வர் ஜெயலலிதாவின் குரல்பதிவு கடந்த 2 தினங்களுக்கு முன், ‘வாட்ஸ் அப்’ மூலம் வெளியானது. இதற்கான ஏற்பாடுகளை அதிமுகவின் தொழில்நுட்ப பிரிவு செய்தது. இந்நிலையில் அதே குரல்பதிவு தற்போது பிஎஸ்என்எல் கைபேசி வாடிக்கையாளர்களுக்கும் ‘வாய்ஸ் மெயில்’ மூலம் அனுப்பப்பட்டுள்ளது. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு வரும் அழைப்பை எடுத்து பேசினால் அதில் முதல்வர் ஜெயலலிதாவின் குரல் ஒலிக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.