10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கேட்ட ‘பீப்’ பாடலை யூடியூப்பில் அகற்றுவதில் நீடிக்கும் சிக்கல்: போலீஸார் குழப்பம்

10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கேட்ட ‘பீப்’ பாடலை யூடியூப்பில் அகற்றுவதில் நீடிக்கும் சிக்கல்: போலீஸார் குழப்பம்
Updated on
1 min read

இசையமைப்பாளர் அனிருத் இசையில் நடிகர் சிம்பு பாடியதாக கூறப்படும் ‘பீப்’ பாடல் சில நாட்களுக்கு முன்பு யூடியூபில் வெளியானது.

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இந்தப் பாடலின் வரிகள் இருப்பதாக கூறி பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். இதை யடுத்து சிம்பு, அனிருத் மீது கொடுக்கப்பட்ட புகாரின்படி கோவை மற்றும் சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பேஸ்புக், வாட்ஸ் அப்..

இந்த ‘பீப்’ பாடல் யூடியூப் மட்டுமின்றி பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் அதிவேகமாக பரவி வருகிறது. இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் அந்த பாடலை கேட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார், ’பீப்’ பாடலில் ஆபாச வார்த்தை உள்ளது. அதனால் அந்த பாடலை யூடியூப் இணையதளத்தில் இருந்து அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டனர். இதை த்தொடர்ந்து பாடலில் உள்ள ஆபாச வார்த்தையை மொழி பெயர்த்து சொல்லும்படி யூடியூப் இணையதள அதிகாரிகள் தெரி வித்தனர்.

பதிவேற்றியது யார்?

போலீஸார் அந்த ஆபாச வார்த் தையை மொழிபெயர்த்து சொன்ன பிறகும், யூடியூப் அதிகாரிகள் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. யூடியூப் இணையதளத்தில் இருந்து பாடலை அகற்றவும் முன்வரவில்லை. இதனால் பாடலை யூடியூபில் இருந்து அகற்ற முடியாமலும், யூடியூபில் பாடலை பதிவேற்றம் செய்தது யார் என்று கண்டுபிடிக்க முடியாமலும் போலீஸார் திணறி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in