

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 3 கப்பல்கள் மூலம் 150 டன் உணவுப் பொருட்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன என்று கடற் படையின் கிழக்கு பிராந்திய அதிகாரி சதீஷ் சோனி தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
சென்னையில் மழை வெள்ளத் தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கடற்படைக்கு சொந்தமான 3 கப்பல்கள் மூலம் 150 டன் நிவாரணப் பொருட்கள் விசாகப்பட்டினத்தில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. 3-வது கப்பலில் 70 டன் அரிசி, 7 லட்சம் லிட்டர் குடிநீர், மருந்துப் பொருட் கள், ரப்பர் படகுகள் உள்ளிட்டவை எடுத்து வரப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வெள்ளத்தால் பாதிக் கப்பட்ட இடங்களுக்கு கொண்டு சென்று விநியோகம் செய்யப்படும்.
தமிழக அரசு தலைமைச் செயலா ளர் அளித்த வரைபடத்தின் அடிப் படையில் பாதிக்கப்பட்ட இடங்கள் கண்டயறிப்பட்டு அங்கு சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள் வோம். தேசிய பேரிடர் மீட்புக் குழு வுடன் இணைந்து இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை மீட்டுள்ளோம். தமிழக அரசு கேட்டுக் கொண்டால் மேற்கொண்டும் தேவையான அளவுக்கு நிவாரணப் பொருட்களை வழங்க கடற்படை தயாராக உள்ளது.
இவ்வாறு சதீஷ் சோனி கூறினார்.
கடலோர காவல் படைக்கு சொந்தமான விக்ரஹா, சமுத்ரா ஆகிய இரு கப்பல்கள் மூலம் 12 ஆயிரம் கிலோ உணவுப் பொருட்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. மேலும், 3 ஆயிரம் லிட்டர் தண்ணீரும், 60 ஆயிரம் தண்ணீர் பாக்கெட்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.