

மழைக்கு பலியான 5 பேரின் குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''திருவண்ணாமலை மாவட்டம் மோசவாடி ரத்தினம்மாள், திருநெல்வேலி மாவட்டம் மாயமான்குறிச்சி லிங்கராஜா, திருவாரூர் மாவட்டம் மகாதேவன்பட்டினம் உமா மகேஸ்வரி ஆகியோர் கன மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தனர்.
சென்னை வேளச்சேரி ராஜகோபால், திருநெல்வேலி மாவட்டம் வடக்கு பனவடலி வேலுச்சாமி ஆகியோர் மழையால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து துயரம் அடைந்தேன்.
உயிரிழந்த 5 பேரின் குடும்பத்தினருக்கு பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 4 லட்சம் வழங்கப்படும்'' என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.