

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் இறப்பிலும் இணை பிரியாமல் தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேவகோட்டை தண்டாயுத பாணி கோயில் தெருவைச் சேர்ந்தவர் வீரசுவாமிநாதன்(93). இவரது மனைவி சுந்தராம்பாள்(88).
இவர்களுக்குத் திருமணமாகி 57 ஆண்டுகள் ஆகின்றன. குணசேகரன், வீரக்குமார் ஆகிய இரு மகன்களும், சுகந்திரா என்ற மகளும் உள்ளனர். இவர்களுக்கும் திருமணமாகி விட்டது. இந்த மூத்த தம்பதி தேவகோட்டையில் தனது பேரன், பேத்திகளுடன் வசித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சுந்தராம்பாள் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதையறிந்த கணவர் சுவாமிநாதன் மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் வேதனையில் இருந்தார்.
அதனைத் தொடர்ந்து நேற்று அதிகாலை கணவர் வீரசுவாமிநாதனும் உயிரிழந்தார்.
இறப்பிலும் இணை பிரியாமல் தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.