திருச்சியில் உள்ள பெல் நிறுவன ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை உடனே தொடங்க வேண்டும்: நிர்வாக இயக்குநருக்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்

திருச்சியில் உள்ள பெல் நிறுவன ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை உடனே தொடங்க வேண்டும்: நிர்வாக இயக்குநருக்கு டி.கே.ரங்கராஜன் கடிதம்
Updated on
1 min read

திருச்சி பெல் நிறுவனத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை உடனே தொடங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக்குழு உறுப்பினரும் பெல் தொழிலாளர் சங்கத்தின் தலைவருமான டி.கே.ரங்கராஜன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக திருச்சி பாரத மிகுமின் நிறுவனத்தின் (பெல்) தலைமை நிர்வாக இயக்குநருக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

கரோனா 2-வது அலையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. மே மாதத்தில் இந்தியாவில் தினந்தோறும் 5 லட்சம் முதல் 8 லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என பல்வேறு ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க பெருமளவில் ஆக்சிஜன், வென்டிலேட் டர்கள் தேவைப்படுகிறது. ஆக்சிஜன் படுக்கைகள் இல்லாததால் பலர் உயிரிழக்க நேரிடுகிறது. மத்திய அரசின் அறிவியல் ஆலோசகர் விஜயராகவன், கரோனா 3-வதுஅலை இந்தியாவில் தவிர்க்க முடியாதது ஒன்று என்று கூறியுள்ளார்.

இந்த பின்னணியில் மருத்துவ ஆக்சிஜன் அவசியமானது என்பதை அறிவீர்கள். திருச்சி பெல் தொழிற்சாலையில் மிகப்பெரிய ஆக்சிஜன் தயாரிப்பு ஆலை உள்ளது. இதன் அன்றாட உற்பத்தி திறன் ஒரு ஷிப்டுக்கு 20 மெட்ரிக் டன். இந்த ஆலை தற்போது இயங்கவில்லை. இந்தஆலையை உடனடியாக சீரமைப்பது இயலாத ஒன்று.

ஆக்சிஜன் உற்பத்தி தொழில்நுட்பமும், அதற்கான பணியாளர்களும் பெல் நிறுவனத்தில் உள்ளனர். ஹரித்வார், போபாலில் உள்ள பெல் கிளை நிறுவனங்கள் ஏற்கெனவே ஆக்சிஜன் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன. அதுபோல திருச்சி பெல் தொழிற்
சாலையில் புதிய ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை புதிய தொழில்நுட்பத்துடன் உடனடியாக நிறுவி மிக விரைவில் உற்பத்தியை தொடங்க வேண்டும். இவ்வாறு டி.கே.ரங்கராஜன் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in