Published : 10 May 2021 05:27 AM
Last Updated : 10 May 2021 05:27 AM

அதிக கட்டணம் வசூலித்த 11 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

சென்னை

அதிக கட்டணம் வசூலித்த 11 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இன்று முதல் 24-ம் தேதி வரை இரு வாரங்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஊரடங்கு குறித்து முன்கூட்டியே அறிவித்த அரசு, சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக சனி, ஞாயிறு இரண்டு நாட்களும் அதிக அளவில் பேருந்துகளை இயக்க உத்தரவிட்டது. அதன்படி, சென்னையில் இருந்து ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். ஆம்னி பேருந்துகளிலும் மக்கள் டிக்கெட் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். அதில், சில ஆம்னி பேருந்துகளில் பல மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தன.

இதையடுத்து, சென்னை வடக்கு, தெற்கு, விழுப்புரம், வேலூர், ஈரோடு, சேலம், கோயம்புத்தூர், திருச்சி, விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் 726 ஆம்னி பேருந்துகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். பாதுகாப்பு உள்ளிட்ட சில விதி மீறல்
களில் ஈடுபட்ட 101 ஆம்னி பேருந்துகளுக்கு சோதனை அறிக்கைஅளிக்கப்பட்டன. அந்தப் பேருந்துகளின் உரிமையாளர்களிடம் இருந்து ரூ.5 லட்சத்து 50,500 அபராதம் விதிக்கப்பட்டது.

இதேபோல, அதிக கட்டணம் வசூலித்த 8 பேருந்துகள், விதிமுறைகளை மீறிய 3 பேருந்துகள் என மொத்தம் 11 ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x