தமிழகம் முழுவதும் அரிசி அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக கரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்; உடனடியாக டோக்கன் விநியோகம்

தமிழகம் முழுவதும் அரிசி அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக கரோனா நிவாரணம் ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்; உடனடியாக டோக்கன் விநியோகம்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் அனைத்துஅரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண உதவி முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.

கரோனா அச்சுறுத்தலால் மக்கள் படும் துன்பங்களைப் போக்க, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்றுதேர்தல் வாக்குறுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அவர் முதல்வராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே இத்திட்டத்துக்கான கோப்பில் கையெழுத்திட்டார். இதற்கான அரசாணையும் உடனே பிறப்பிக்கப்பட்டது.

இத்திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து உணவுத் துறைஅமைச்சர் சக்கரபாணி சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று கூறியதாவது:

நாங்கள் ஆட்சிக்கு வந்தால், கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று தேர்தலின்போது வாக்குறுதி அளித்தோம். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின்தலைமையில் தற்போது ஆய்வுக் கூட்டம் நடந்தது.

அதன்படி, 2 கோடியே 7 லட்சத்து 87 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுத் துறை மூலமாக ரூ.4,153.39 கோடி செலவில் முதல் தவணையாக கரோனா நிவாரண நிதி ரூ.2 ஆயிரம்வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் 10-ம் தேதி (நாளை) தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, மாவட்டம்தோறும் அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைப்பார்கள்.

பிறகு, நியாயவிலை கடைகளில் 10-ம் தேதி முதல் தினமும் 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் என்ற வகையில், சமூக இடைவெளியை பின்பற்றி காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரைரூ.2 ஆயிரம் இம்மாதத்திலேயே வழங்கப்படும்.

வீடு வீடாக டோக்கன்

டோக்கனை நியாயவிலை கடை விற்பனையாளர்கள் வீடு, வீடாக சென்று வழங்குவார்கள். அதில் குடும்ப அட்டைதாரர் பெயர், எந்தநியாயவிலை கடை, எந்த தேதி,நேரம் என்பன உள்ளிட்ட விவரங்கள்இடம்பெறும். குடும்ப அட்டையில்உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் நியாயவிலை கடைக்கு சென்று,நிவாரணத் தொகையை பெறலாம்.

அரிசி குடும்ப அட்டை வைத்திருப்போருக்கு மட்டுமே இந்த நிவாரணம் வழங்கப்படும். சர்க்கரை அட்டை வைத்திருப்போருக்கு வழங்கப்படாது. யாரும் விடுபடாமல் அனைவருக்கும் நிவாரணம் போய்ச் சேருவதை மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிப்பார்கள்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in