Published : 31 Dec 2015 07:57 AM
Last Updated : 31 Dec 2015 07:57 AM

பேரறிவாளனை விடுவிக்க கோரி தமிழக ஆளுநரிடம் மனு

பேரறிவாளனை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தமிழக ஆளுநரிடம் பேரறிவாளனின் வழக்கறிஞர்களான பிரபு ராமசுப் பிரமணியம், சந்திரசேகர், தொல்காப்பியன், அருண் ஆகியோர் மனு கொடுத்துள் ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கை புலனாய்வு செய்த அதிகாரி தியாகராஜன், தாம் பேரறிவாள னிடம் எடுத்த ஒப்புதல் வாக்கு மூலம் தவறானது என்று 2013-ம் ஆண்டு கூறினார். அப்போது தூக்குத் தண்டனை வழக்கு நிலுவையில் இருந்ததால், தண்டனையை நிறைவேற்றுவதற்கு எடுத்துக் கொண்ட காலதாமதம் பற்றி மட்டுமே அப்போது விவாதிக் கப்பட்டதால் தியாகராஜ னின் ஆதாரங்கள் பயனளிக்க வில்லை. இவ்வழக்கில் தூக்கு ரத்தான நிலையில், முதல்வர் ஜெயலலிதா, தமிழக அமைச் சரவையைக் கூட்டி பேரறிவாளன் உள்ளிட்டோரின் விடுதலைக்காக தீர்மானம் நிறைவேற்றினார். அதன் காரணமாகவும் அதிகாரி தியாகராஜனின் ஆதாரங்கள் மீண்டும் பயனற்றுப் போயின.

ஒரு வழக்கு முடிந்த நிலையில், இதுபோன்ற புதிய ஆதாரங்கள், புதிய சூழல்கள் உருவாகும்போது அவற்றை விசாரிக்க சட்டத்தில் இட மில்லை. அதேநேரத்தில் குடியரசுத் தலைவரும், மாநில ஆளுநரும் இதுபோன்ற சூழலில் மன்னிப்பு, தண்டனை குறைப்பு, தண்டனை ரத்து செய்தல் போன்ற வற்றுக்கான அதி காரங் களைப் பயன்படுத்தி பாதிக்கப் பட்டவர்களுக்கு உரிய நிவார ணம் வழங்கு வதன் மூலம் நீதியை நிலை நாட்ட முடியும். எனவே, அரசியலமைப்பு சட்டப் பிரிவு 161-ஐ தாங்கள் பயன்படுத்தி விடுலை செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x