Published : 08 May 2021 06:21 PM
Last Updated : 08 May 2021 06:21 PM

2 வார ஊரடங்கு: வெளியூர் செல்ல சிறப்புப் பேருந்துகளில் எப்படி டிக்கெட் எடுப்பது? விவரம்

ஊரடங்கை முன்னிட்டு இன்றும் நாளையும் பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கும், மாநிலத்தில் முக்கிய நகரங்களான கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே தொடர்ந்து பேருந்து வசதியை போக்குவரத்துத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:

“கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி தமிழக முதல்வர் மே 10 காலை 4 மணி முதல் மே.24 காலை 4 மணி வரை இரு வாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தி உத்திரவிட்டுள்ளார்.

அதனை முன்னிட்டு இன்றும் நாளையும் பொது மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில் சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கும், மாநிலத்தில் முக்கிய நகரங்களான கோவை, திருப்பூர், சேலம், திருச்சி, மதுரை மற்றும் முக்கிய நகரங்களுக்கு இடையே தொடர்ந்து பேருந்து வசதியை போக்குவரத்துத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மே.08 மற்றும் மே.09 (ஞாயிறு) ஆகிய நாட்களில் பயணிகளின் வசதிக்காக சென்னை மற்றும் முக்கிய நகரங்களில் இரவு நேரத்தில் சிறப்பு பேருந்துகள் முழுமையாக இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மே 09 (ஞாயிறு) அன்று கடைசியாகப் புறப்படும் பேருந்துகள் கீழ்கண்டவாறு இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

புறப்படும் இடம் சேரும் இடம் நேரம்

சென்னை - மார்த்தாண்டம் மாலை 6.00 மணி

சென்னை - நாகர்கோவில் மாலை 7.00 மணி

சென்னை - தூத்துக்குடி மாலை 7.00 மணி

சென்னை செங்கோட்டை மாலை 7.30 மணி

சென்னை திருநெல்வேலி இரவு 8.00 மணி

சென்னை திண்டுக்கல் இரவு 8.00 மணி

சென்னை மதுரை இரவு 11.30 மணி

சென்னை திருச்சி இரவு 11.45 மணி

இயக்கப்படுகின்ற சிறப்பு பேருந்துகள் அனைத்தும் தமிழ்நாடு அரசு விதித்துள்ள நோய்த் தடுப்பு வழிக்காட்டு நெறிமுறைகளான, கட்டாய முகக்கவசம் அணிதல் போன்றவற்றை பின்பற்றியே பேருந்துகள் இயக்கப்படும். இதனை பயணம் மேற்கொள்ள வரும் பொதுமக்களும் தவறாது பின்பற்றி பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சொந்த ஊர்களுக்குப் பயணம் மேற்கொள்கின்ற பொதுமக்கள், கடைசி நேர கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, இணையதள வசதியான www.tnstc.in மற்றும் tnstc official app ஆகியவற்றின் மூலமாக முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செயல்படும் முன்பதிவு மையங்களிலும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பொதுமக்கள் அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கத்தினை பயன்படுத்திக் கொண்டு, தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து கொண்டு பாதுகாப்பு அம்சங்கள் அனைத்தினையும் பின்பற்றி தங்கள் சொந்த இடங்களுக்கு பயணம் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களை பணிசெய்யும் இடத்திலிருந்து தங்கள் வீடுகளுக்கு செல்வதற்கு (Point to Point) பேருந்துகள் தேவைப்படின் கீழ்கண்ட கைபேசி எண்ணை தொடர்புகொண்டு பதிவு செய்து பயன் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வ. எண். போக்குவரத்துக் கழகங்கள் கைபேசி எண்

1 மாநகர் போக்குவரத்துக் கழகம், சென்னை 94450-30523

2 அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை 94450-14416

3 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், விழுப்புரம் 94450-21206

4 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கோயம்புத்தூர் 94422-68635

5 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் 94879-95529 “

இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x