Published : 08 May 2021 03:14 am

Updated : 08 May 2021 05:32 am

 

Published : 08 May 2021 03:14 AM
Last Updated : 08 May 2021 05:32 AM

கரோனா வைரஸ் தாக்கத்தால் 70 சிறப்பு ரயில்கள் ரத்து: 6 மாதம் வரை கட்டணம் திரும்ப பெறலாம்

trains-cancelled

சென்னை

கரோனா தாக்கத்தால் தெற்கு ரயில்வேயில் இதுவரை 60-க்கும்மேற்பட்ட சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், மேலும் 12 ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ன.

கரோனா அச்சத்தால் பயணிகள்வருகை குறைவாக இருப்பதாலும், கரோனா பரவலை தடுக்கும் வகையிலும் தெற்கு ரயில்வேயில் இதுவரை இயக்கப்பட்ட 60-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.


குறிப்பாக, சென்னையில் இருந்து கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, ஈரோடு, நாகர்கோவில் பெங்களூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல் அரக்கோணம் - ஜோலார்பேட்டை, மேட்டுபாளையம் - கோயம்புத்தூர், சென்னை எழும்பூர் - புதுச்சேரி உட்பட 9 இணை முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல, நிஜாமுதீன் - சென்னை சென்ட்ரல் (02433/02434) ராஜ்தானி சிறப்பு ரயில்கள் வரும் 12-ம் தேதி முதலும், பிட்ராகுண்டா - சென்னை சென்ட்ரல் சிறப்பு ரயில்கள் (07237/07238) இன்று முதல் 31-ம் தேதி வரையிலும் ரத்துசெய்யப்படுகின்றன. அகமதாபாத் - சென்னை சென்ட்ரல் (09220/09219) சிறப்பு ரயில்கள் வரும் 10-ம்தேதி முதலும், காந்திதாம் - திருநெல்வேலி சிறப்பு ரயில்கள் (09424/09423) வரும் 13-ம் தேதி முதலும், திருநெல்வேலி - போர்பந்தர் (09262/09261) சிறப்பு ரயில்கள் வரும் 13-ம் தேதி முதலும், திருநெல்வேலி - இந்தூர் (09332/09331) சிறப்பு ரயில்கள் வரும் 11-ம் தேதி முதலும் மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகின்றன.

ரத்தாகும் ரயில்களுக்கான கட்டணத்தை திரும்பப் பெறுவதுகுறித்து ரயில்வே அதிகாரிகள்கூறியபோது, ‘‘இணையதளம்வழியாக முன்பதிவு செய்தவர்களுக்கு அவர்களின் வங்கி கணக்கில் பணம் திரும்ப வந்துவிடும். பயணிகள் டிக்கெட் பயண நாளில் இருந்து அடுத்த 6 மாதங்கள் வரைகட்டணத்தை திரும்பி பெறலாம் என்பதால், முன்பதிவு மையங்களில் நெரிசலை தவிர்க்க வேண்டும்’’ என்றனர்.



70 சிறப்பு ரயில்கள் ரத்துகரோனா வைரஸ்கட்டணம் திரும்ப பெறலாம்Trains cancelled

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x