

கனமழைக்கு உயிரிழந்த 18 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் ஜெய லலிதா அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
காஞ்சிபுரம் மாவட்டம் ஆதனூ ரைச் சேர்ந்த ராஜேஷ்குமார், தண்டலம் தர், வெங்கடேசன், நெல்லை மாவட்டம் காரிசாத்தானை சேர்ந்த சிவா, விழுப்புரம் நெடி மொழியனூரை சேர்ந்த முத்து லட்சுமி ஆகியோர் ஆற்றில் அடித் துச் செல்லப்பட்டு இறந்தனர்.
சென்னை கோட்டூர்புரம் முனுசாமி, ஜாபர்கான்பேட்டை மூர்த்தி, சித்ரா, மேற்கு சைதாப்பேட்டை ராஜபரத், திருவான்மியூர் ராஜேந்திரன், கரன், தி.நகர் கனகா, ஆண்டாள் ஆகியோர் கனமழையால் வெள்ள நீரில் மூழ்கி இறந்தனர். விழுப்புரம் ஆனாங்கூர் அஞ்சு லட்சுமி, கீழப்பெரும்பாக்கம் வீரப்பா, தஞ்சை மருதநல்லூர் ராமாயி ஆகியோர் சுவர் இடிந்து விழுந்தும், நெல்லை மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பால் பாண்டியன் மின்சாரம் தாக்கியும், திருவண்ணாமலை குன்னத்தூரை சேர்ந்த மொட்டை, ஏரி தண்ணீரில் தவறி விழுந்தும் இறந்தனர்.
மழைக்கு பலியான இந்த 18 பேரின் குடும்பங்களுக்கும் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் உடனடியாக வழங்கப்படும்.