Published : 08 May 2021 03:15 AM
Last Updated : 08 May 2021 03:15 AM

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திருவெறும்பூர் தொகுதிக்கு முதல்முறையாக அமைச்சர் அந்தஸ்து

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் ஏற்கெனவே 8 தொகுதிகளைச் சேர்ந்த எம்எல்ஏக் கள் அமைச்சர்களாக இருந்துள்ள நிலையில், திருவெறும்பூர் தொகு திக்கு தற்போது முதல்முறையாக அமைச்சர் அந்தஸ்து கிடைத் துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, ரங்கம், திருவெறும்பூர், மண்ணச்சநல்லூர், முசிறி, லால்குடி, துறையூர், மணப் பாறை என 9 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், திருச்சி மேற்கு தொகுதி, மறு சீரமைப்புக்கு முன் திருச்சி 2-வது தொகுதியாக இருந்தபோது அன்பில் தர்மலிங்கம்(திமுக) நல்லுசாமி(அதிமுக), மேற்கு தொகுதி யான பின் பரஞ்ஜோதி(அதிமுக), கே.என்.நேரு(திமுக), திருச்சி கிழக்கு தொகுதியில் வெல்லமண்டி நடராஜன், ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா(அதிமுக-முதல்வர்), கே.கே.பாலசுப்பிரமணியன் (அதிமுக), கு.ப.கிருஷ்ணன் (அதிமுக), வளர்மதி, மண்ணச்சநல்லூர் தொகுதியில் பூனாட்சி(அதிமுக), முசிறி தொகுதியில் சிவபதி(அதிமுக), லால்குடி தொகுதியில் அன்பில் தர்மலிங்கம் (திமுக), கே.என்.நேரு(திமுக), துறையூர் தொகுதி மறு சீரமைப்புக்கு முன் உப்பிலியபுரம் தொகுதியாக இருந்தபோது சரோஜா(அதிமுக), மணப்பாறை தொகுதி மறு சீரமைப்புக்கு முன் மருங்காபுரி தொகுதியாக இருந்தபோது பொன்னுசாமி (அதிமுக), புலவர் செங்குட்டுவன் (திமுக) ஆகியோர் அமைச்சர் களாக இருந்துள்ளனர்.

இதற்கு முன், திருச்சி மாவட் டத்தில் உள்ள 9 தொகுதிகளில் திருவெறும்பூர் தொகுதி தவிர மற்ற 8 தொகுதிகளும் அமைச்சர் அந்தஸ்தை பெற்றிருந்தன. திரு வெறும்பூர் தொகுதியில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 7 முறை திமுகவும், 3 முறை அதிமுகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேமுதிக தலா ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால், ஒருவர் கூட அமைச்சராக இருந்ததில்லை.

இந்நிலையில், திருவெறும்பூர் தொகுதியிலிருந்து தற்போது 2-வது முறையாக எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டுள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகி உள்ளார். இதன் மூலம் திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி முதன் முறையாக அமைச்சர் தொகுதி அந்தஸ்தை பெற்றுள்ளது. இதனால் திருவெறும்பூர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x